தமிழ் சினிமாவில் வெற்றிமாறன்,பா. ரஞ்சித், மாறி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் ஒதுக்கபட்ட மக்களுக்கு ஆதரவாகவும் அவர்கள் படும் துன்பங்களையும் படமாக இயக்கு வருகின்றனர். இவர்கள் இயக்கும் படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகின்றது.
நடிகர் ரஞ்சித் நடித்த ’கவுண்டம்பாளையம்’ என்ற திரைப்படத்தின் புரமோஷன் விழாவிலே இயக்குனர் பிரவீன் காந்தி, ” பா. ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோரின் வளர்ச்சிதான் தமிழ் சினிமாவின் தளர்ச்சிக்கு காரணம்” என்று கூறியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஒரு காமெடியனை கூட கீரோவாக மாற்றமுடியும் என்று நிரூபித்து விட்டார். இதில் கதாநாயகனாக நடித்த சூரி இதற்கு முன்பு காமெடியனாகவே நடித்திருப்பார். இந்த படத்தின் கைலைட்டே சூரியின் நடிப்புதான்.
இப் படம் வெளியான போது சூரியா இது? என்று ஆச்சரிய படுத்தியிருப்பார். இவருக்கு இப் படத்திற்கு பின் கீரோவாக பல படங்களில் நடித்துவருகின்றார்.
விடுதலை படம் வெளியாகும் போது இதன் 2 ம் பக்கமும் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகி விட்டது.
இவ்வாறு இருக்க வெற்றிமாறன் அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவில் இன்றளவும் பல்வேறு இடங்களில் சாதி பாகுபாடு இருக்கத்தான் செய்கிறது. அதை இல்லை என்று பேசுபவர்கள் எந்த இடத்தில் வாழ்கின்றனர் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது என பேசி பதிலடி கொடுத்துள்ளார்.
விடுதலை 2 படத்தில் என்னும் 20 நாட்களுக்கான படபிடிப்பு இதயம் இருக்கின்றது, அது முடிந்தவுடன் படம் உடனடியாக வெளியாகும் என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.