தளபதி 69 இல் இருந்து விலகிய தயாரிப்பாளர்!- வெளியான காரணம்…

தளபதி விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகின்றார். கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு கோட் படத்தின் மிகுதி படபிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

இப் படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்துவதற்கு திட்டமிடபட்டுள்ளது. மலேசியாவில் வைப்பதற்கு திட்டமிடபட்டுள்ளது. ஆனால் என்னும் சரியான முடிவுகள் வெளியாகவில்லை.

விஜயின் படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் . அது நன்றாக இல்லாவிட்டாலும் ரசிகர்கள் அதை கொண்டாடுவார்கள்.

இவ்வாறு இருக்க தளபதி 69 ஓடு தனது சினிமா வாழ்க்கையை முடித்து விட்டு அரசியலுக்கு செல்லவுள்ளார். தற்போது தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த இவர் 2026 ம் ஆண்டு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார். இவருக்கு பல பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறியும் அவருக்கு ஆதரவாகவும் உள்ளனர்.

விஜய் அரசியலுக்கு வந்தால் ஒரு நல்ல மாற்றம் உண்டாகும் என்று அனைவரும் நம்புகின்றனர்.

தளபதி 69 படத்தை  எச் வினோத் இயக்கவுள்ளார்.

இவ்வாறு இருக்க விஜய் கோட் படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். தற்போது தளபதி 69 இற்கு 250 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.

ஆர்ஆர்ஆர் பட தயாரிப்பாளர் தான் இப் படத்தையும் தயாரிக்க இருந்தார். தயாரிபாளர் விஜய் அதிக சம்பளம் கேட்பதால் விலகி விட்டார்.

எந்த ஒரு அக்ரிமெண்ட்டும் போடாமல் இந்த படத்தை பற்றி அந்த தயாரிப்பாளர் விளம்பரம் செய்ததால் விஜய் கோவப்பட்டு இந்த தயாரிப்பாளர் வேண்டாம் என்று சொன்னதாக ஒரு செய்தி வெளியானது.  ஆனால் இது உண்மையில்லை என்றும் இதற்கு காரணம் விஜய் கேட்ட சம்பளம் என்றும் கூறப்படுகின்றது.

more news