அரண்மனை வசூல் இத்தனை கோடியா?

அரண்மனை 4 கடந்த 6 ம் திகதி வெளியானது. வெளியான முதல் நாளே 4 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியிருந்தது.

இப் படத்தின் விமரசங்கள் கலவையான விமர்சனகளை பெற்றாலும் இது ஒரு குடும்ப படமாக அமைந்திருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

அரண்மனை 3 தோல்வியை கொடுத்த நிலையில் தற்போது அரண்மனை 4 இந் வெற்றியை சுந்தர் சி கூட எதிர்பார்த்தகிருக்க மாட்டார்.

இப் படத்தில் கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், டெல்லி கணேஷ், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப் படத்தின் கதை என்னவென்றால்,வழக்கறிஞர் சரவணன் (சுந்தர்.சி) தன் அத்தையுடன் (கோவை சரளா) வசித்து வருகிறார். குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட தன் தங்கை செல்வி (தமன்னாவும்) தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வருகிறது.

இதனால், தன் அத்தையுடன் தமன்னாவின் ‘அரண்மனை’ வீட்டுக்குச் செல்கிறார் சுந்தர்.சி. தன் தங்கை மற்றும் அவர் கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கும் அவர், அந்த வீட்டில் இன்னொரு உயிர் போக இருப்பதை அறிகிறார்.

அந்த உயிரைக் கொல்லத் துடிக்கும் தீயசக்தி எது, அது ஏன் கொல்லத் துடிக்கிறது? அந்த உயிரைக் காப்பாற்ற சுந்தர்.சி என்ன செய்கிறார் என்பது தான் அரண்மனை 4 இன் கதை.

இது ஒரு குடும்ப படம் என்பதால் மூன்று நாட்களில் 17 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

முதல் நாள் 4.65 கோடியும் இரண்டாம் நாள் 6.25 கோடியுமாக 2 நாட்களில் 10 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வருடம் வெளியான படங்களிலே அதிக வரவேற்பை பெற்ற படம் என்றால் அது அரண்மனை 4 தான்.

இதுவரைக்கும் இப் படம் 46 கோடி வரை வசூல் செய்துள்ளது.

more news