இந்தியாவில் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்று முடிந்தது. இந் நிலையில் பொதுமக்கள் உட்பட பல பிரபலங்களும் தமது வாக்குகளை செலுத்தி வந்தனர்.
நடிகர் சூரி உட்பட பல பொதுமக்களின் பெயர் தேர்தல் பட்டியலில் இடம் பெறாத விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந் நிலையில் நடிகர் விஜய் கோட் பட பிடிப்பிற்காக ரஷ்யா சென்றிருந்தார். இருப்பினும் ரஷ்யாவில் இருந்து தனது ஒட்டினை போடுவதற்கு வந்திருந்தார்.
விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குசாவடிக்கு சென்று தனது வாக்கினை பதிவு செய்திருந்தார்.
விஜய் அங்கு வருவதற்கு முன்பே அங்கு ரசிகர்கள் கூட்டம் கூடி விட்டனர். விஜய்யை நேரில் பக்காகவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எல்லாம இதுதான் அரிய வாய்ப்பு.
இந் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீது வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 200 ற்கும் மேற்பட்டவர்களோடு வாக்குசாவடிக்கு வந்துள்ளார் என்றும் தேர்தல் விதிகளை மீறி நடந்து கொண்டார் என்றும் கூறி சமூக ஆர்வலர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
Be the first to comment