வாழ்க்கை ஒரு வட்டம் – யுவனின் ஆவேச பேச்சு!

யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரின் இசைக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

ராவணன் இசையில் சிவன் மயங்கியது போல் இவரின் இசையில் மயங்ககாதவர் எவரும் இருக்க முடியாது. தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு பிடித்து விட்டார்.

பல படங்கள் வெற்றி படங்களாக மாறியதற்கு கூட இவருடைய இசைதான் காரணம்.

இவ்வாறு இருக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் கோட் படத்தில் இருந்து விசில் போடு பாடல் வெளியானது.

இப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும் அதிகமான எதிர்மறையான கருத்துக்களே குவிந்த வண்ணம் உள்ளன.

யுவனின் இசையில் பல கோளாறுகள் இருப்பதாக கூறி அவரை சமூக வலைத்தளங்கக்களில் கலாய்த்து வருகின்றனர்.

அனிருத் இன் இசைதான் விஜய்க்கு ஒத்து போகும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இந் நிலையில் யுவன் இன்ஸ்டா வில் இருந்து விலகியதால் பல சர்ச்சைகள் எழுந்தன. அவரிடமும் ரசிகர்கள் மன்னிப்பும் கேட்டனர்.

ஆனால் தான் விலகிய காரணம் வேறு தனது ரெக்னிக்கலில் ஏற்பட்ட கோளாறு என்று விளக்கம் அளித்துள்ளார்.

இந் நிலையில் யுவன் பேட்டியளித்த பழைய கானொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருக்கின்றது. அதில் வாழ்க்கை ஒரு வட்டம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

வாழ்க்கையில் எல்லாமே அடங்கி இருக்கு. நீங்கள் நண்பர்களை இழப்பீர்கள்,குடும்பத்தை இழப்பீர்கள்,பணத்தை இழப்பீர்கள்,ரசிகர்களை இழப்பீர்கள். வாழ்க்கை ஒரு வட்டம்.

ஆனால் உங்கள் இதயம் நிலையா இருக்க வேண்டும். அதை எல்லாம் கையால வேண்டும்.

ஒரு சமயத்தில் நாம் பீக்கில் இருப்போம், அதன் பின் கீழே இருப்போம் இது தான் வாழ்க்கை என்று அவர் கூறிய கானொளி தற்பொழுது வைரல் ஆகிவருகின்றது.

அன்று அவர் கூறியது அவருடைய வாழ்க்கையிலும் நடந்து விட்டது. இது அவருடைய வழக்கயிக்க மட்டுமல்ல அனைவருடைய வாழ்க்கையிலும் நடக்கும்.