புளூ சட்டை மாறனின் செயலால் கதறும் விஜய் ஆண்டனி!

புளூ சட்டை மாறன் படங்களை விமர்சனம் செய்பவர். அவருடைய விமர்சனங்ககளை பார்த்த பின்புதான் மக்கள் இப் படம் பார்க்கவேண்டுமா இல்லயா? என்று முடிவு பண்ணுவார்கள்.

அவருடைய விமர்சனங்ககளுக்கு ஒரு தனி ராசிகள் கூட்டமே உண்டு. இவர் அநேகமான படங்களுக்கு எதிமறையான விமர்சனங்ககளையே கொடுத்துள்ளார்.

இவ்வாறே விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ரோமியோ திரை படத்திற்கும் எதிமறையான விபர்சனத்தையே கொடுத்துள்ளார்.

ரோமியோ படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிர்னாலினி ஆகியோர் நடித்துள்ளனர்.

வெளிநாட்டிற்கு சென்று தான் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இருக்கும் ஒரு அப்பாவி பையனுக்கும் தான் சினிமாவில் கதாநாயகியாக ஆகவேண்டும் என்று நினைக்கும் பொண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கபடுகின்றது.

இதற்கு பின்னர் இவர்கள் இருவர் வாழ்க்கையிலும் என்ன நடக்க போகின்றது என்பதுதான் இப்படத்தின் கதை. இப்படம் காதல் மற்றும் சகோதர பாசம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக உள்ளது.

இப் படத்திற்கான விமர்சனங்ககள் பெரிதும் நல்லாதகவே அமைந்துள்ளது. தான் எதிரபத்ததை விட ரொம்ப நன்றாகவே உள்ளது என்றும் விஜய் ஆண்டனியின் நடிப்பு மற்றும் யோகி பாபுவின் நடிப்பு நன்றாகவே உள்ளது என்றும் விஜய் ஆண்டனி,யோகி பாபு இருவரின் கம்போ ரொம்ப நன்றாக உள்ளது என்றும் கூறியுள்ளனர்.

மௌன ராகம்,ராஜா ராணி,சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களை போன்று உள்ளது என்றும் ஒரு சில எதிர் மறையான கருத்துக்கள் இருந்தாலும் பெருமளவில் இப் படம் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந் நிலையில் புளூ சட்டை மாறனின் கருத்திற்கு எதிராக விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியீட்டுள்ளார்.

அதில் பல நல்ல படங்களை தவறாக விமர்சித்து கொல்லும் திரு. புளூ சட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவங்க சொல்வதை எல்லாம் உண்மை என்று நம்பி ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

என அன்பு மக்களே ரோமியோ நல்ல படம், போய் பாருங்க புரியும், ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று வெளியிட்டிருந்தார்.