தளபதி விஜய்யின் 68 வது படமான கோட் படத்தின் வேலைப்பாடுகள் முன்புறமாக நடைபெற்று வருகின்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டெம்பர் 5 ம் திகதி வெளியாகவுள்ளது.
கே பி வை கலக்க போவது யாரு இகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவர் தான் தம்பதிக்கும் பயணங்களில் பல ஏழைமக்களுக்கு உதவி செய்து வருகின்றார். அவர் மற்றவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் இருந்தும் அவர் சம்பாதிக்கும் பணம் போதவில்லை இதனால் ராகவாலாரன்ஸ் உடன் இணைந்து மாற்றம் அமைப்பின் ஊடாக பலருக்கு உதவி வருகின்றனர். இந்த மாற்றம் அமைப்பிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு இருக்க தளபதி விஜய் இவர்கள் இருவரையும் அழைத்து பேசியுள்ளார். உதவி செய்வது நல்ல எண்ணம், அது அரசியல் மூலமாக செய்தால் பலரை சென்றடையும் என்பதால் இவர்களை தன்னுடைய தமிழக வெற்றி கழத்தில் இணையுமாறு கேட்டுள்ளார்.
ராகவா லாரன்ஸ் தன்னுடைய தாயிடம் நான் அரசியலுக்கு சென்றால் பலருக்கு உதவலாம். நான் செல்லட்டுமா? என்று கேட்டக, தாய் அரசியல் ஆசை எல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டார். நான் அம்மாவின் பேச்சை தட்டுவதில்லை, அதனால் அதை அவ்வாறே விட்டு விட்டேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.
இந் நிலையில் சென்னையில் உள்ள தனியார் கல்லுரி கண்காட்சியில் கலந்துகொண்ட பாலாவிடம் பத்திரிக்கையாளர்கள் விஜய் அரசியல் பற்றி கேட்ட போது பாலா தனக்கு அவரை பற்றி பேசுவதற்கே தகுதி இல்லை. அவர் எது செய்தாலும் அது சரியாக தான் இருக்கும். எனக்கு அரசியல் ஆசை இல்லை. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அழைத்தாலும் நான் செல்லமாட்டேன் என்று கூறியுள்ளார்.