வெற்றி மாறனுடன் இணையும் ஜாக் பாட் கிங்க் கவின்!

நடிகர் கவின் விஜய் டிவியில் இருந்து சினிமாவிற்குள் வந்தவர். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கின்றார். அடுத்த சிவகார்த்திகேயன் என்று இவரை அழைக்கின்றனர்.

இவர் நடித்த லிப்ட், டாடா, ஸ்டார் என அனைத்து படங்களும் வரிசையாக இவருக்கு வெற்றியை கொடுத்தன. இவ்வாறு இருக்க இவருக்கு பல பட வாய்ப்புகளும் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றன.

இவர் நடித்த லிப்ட், டாடா இரு படங்களும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் ஸ்டார் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் படத்தை ரசிகர்கள் வெற்றி படமாக்கி விட்டனர்.

இவ்வாறு இருக்க இவர் நெல்சனின் பிளாடி பெக்கர் மற்றும் சதீஷ் இயக்கத்தில் கிஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். வருகின்ற தீபாவளிக்கு கிஸ் படம் வெளியாகவுள்ளது.

பெரிய பெரிய இயக்குனர்களுடன் கை கோர்க்கும் இவர் தற்போது வெற்றிமாறனுடன் இணையவிருக்கின்றார்.

அதாவது இவர் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தை வெற்றிமாறன் தயாரிக்கவுள்ளார். விக்ரான் அசோகன் இப் படத்தை இயக்கவுள்ளார்.

மேலும் கவினுக்கு ஜோடியாக ருஹானி சர்மா நடிக்கவிருப்பதாகவும், வில்லியாக ஆண்ட்ரியா நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

more news