கமல்ஹாசனை விட சிரஞ்சீவி தான் சிறந்த நடிகர்!-சர்ச்சையை கிளப்பிய தெலுங்கு யூடியூபர்!

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனிற்கு பின் யார் சிறந்த நடிகர் என்று கேட்டால் அனைவரும் கமல்ஹாசனையே கூறுவார்கள். அதன் பின் தான் ரஜனி, அஜித், விஜய் இவர்கள் எல்லாம் வருவார்கள். அவரின் நடிப்பு அவ்வளவு தத்துருவமாக இருக்கும்.

இவர் சினிமாவில் 200 இற்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். பல தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். 1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார்.

120 இற்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். 8 படங்களில் இவர் இயக்கி நடித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு விஸ்பரூபம் 2 படத்தில் நடித்திருந்தார். அதன் பின் 3 ஆண்டுகள் காணாமல் போய் விட்டார். பின்னர் 2022 ஆம் ஆண்டு விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ரி கொடுத்தார். அப் படம் மாபெரும் வெற்றியை கொடுத்தது.

1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் படத்தில் நடித்திருந்தார். தற்போது 37 வருடங்கள் கழித்து இருவரும் இணைந்து தக் லைஃப் எனும் வெற்றி படத்தை கொடுக்கவுள்ளனர். இப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன.

இந் நிலையில் பிரபலமான யூடியூப் விமர்சகர் ரகடி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தியாவிலேயே சிறந்த நடிகர் கமல்ஹாசன் இல்லை என்றும் சிரஞ்சீவி தான் சிறந்த நடிகர் என்றும் ரகடி பேசியுள்ளார். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ரகடி பேச்சுக்கு எதிராக கமல் ரசிகர்கள் அனைவரும் பேசி வருகின்றனர். சிரஞ்சீவி நல்ல நடிகர் தான். ஆனால், கமல்ஹாசனை விட சிறந்த நடிகர் என சொல்லவே முடியாது என்றும் ஏகப்பட்ட விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

தற்போது இவரின் இந்தியன் 2 படம் வெளியாகவுள்ளது. அது மட்டுமல்லாது கல்கி படத்திலும் வில்லனாக நடிக்கின்றார்.

more news