சந்தனம் நடிப்பில் வெளியானபடம் தான் இங்க நான் தான் கிங்கு. இப் படத்திற்கு 90 விதம் நல்ல விமர்சனங்களே கிடைத்துள்ளது.
இப் படத்தின் கதை : கல்யாணம் ஆகாத சந்தானம், அவர் கல்யாணம் ஆகனும் என்பதற்காக ஒரு மற்றிமோனி கம்பனியில் வேலை பார்க்கின்றார். அது மட்டுமல்லாது வீடு இருந்தா கல்யாணம் ஆகிடும் என்று கடனுக்கு வீடு வாங்கிட்டரு.
பின்னர் தம்பி ராமையா ஒரு ஜமீன் குடும்பம் என்று பொய் சொல்லி தன்னோட பொண்ண சந்தானத்திற்கு கல்யாணம் பண்ண வர, சந்தானமும் தன்னோட கடனும் தீரும், தனக்கு சொத்தும் கிடைக்கும் என்று நினைச்சு கல்யாணமும் பண்ணுறார். அப்புறம் தான் இவர்கள் எல்லாம் பொய் சொல்லி என்ன ஏமாத்திட்டங்க என்று சந்தானத்திற்கு தெரிய வருகின்றது.
சந்தானத்தோட மாமனார் மற்றும் மச்சான் இருவரும் சந்தானத்தோடயே தங்கிவிடுகின்றனர். இவர்கள் இருவாராலும் சந்தானத்திற்கு பெரிய பிரச்சனை ஏற்படுகின்றது. அதை எவ்வாறு சமாளிக்கின்றார் என்பதே படத்தின் கதை ஆகும்.
இப் படம் ஒரு குடும்பத்தோட பார்க்க கூடிய படமாக இருக்கின்றது என்று கூறி வருகின்றனர். படத்தில் காமெடி நல்ல இருக்கின்றது என்று அனைவரும் கூறி வருகின்றனர். இப் படம் சந்தானத்திற்கு பெரிய திருப்பு முனையாக இருக்ககும்மென்றும் கூறி வருகின்றனர்.
இவ்வாறு இருக்க இப் படத்திற்கு சந்தானம் 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இப் படத்தின் முதல் நாள் வசூல் 1.5 கோடி என்று கூறப்படுகின்றது. இப் படம் சந்தானத்திற்கு வெற்றியை கொடுக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.