ஒரே நாளில் இரு படங்களுக்கான அறிவிப்பை வெளியிடும் ராகவா லாரன்ஸ்!

நடிகர் ராகவா லாரன்ஸ் இயற்கையாக ஒரு கிறிஸ்தவர் அவருக்கு சிறுவயதில் மூலையில் கட்டி இருந்தது. இவர் ராகவேந்திரா சுவாமியை வழிப்பட அந்த நோய் அவரை விட்டு விலகியது.

அவரின் மீது இருந்த பக்தியின் காரணத்தினால் தனது பெயரை ராகவா என்று மாற்றி கொண்டார். அது மட்டுமல்லாது இவர் ராகவேந்திரா எனும் பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகின்றார்.

இவர் ஜெண்டில்மேன் படத்தில் பின்னணி நடனக் கலைஞராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பின்னர் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என அவருடைய வளர்ச்சி அதிகரித்து கொண்டே இருக்கின்றது.

இவர் பல மக்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளை செய்து வருகின்றார். சமீபத்தில் மாற்றம் அறக்கட்டளை மூலம் பல மக்களுக்கு உதவி வருகின்றார். இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜனி வாழ்த்தும் தெரிவித்திருந்தார்.

இவரை போலவே கே பி வை பாலாவும் பல ஏழை மக்களுக்கு உதவி வருகின்றார். இவர் செய்யும் உதவிகளுக்கு கூட பல மக்கள் தடையாக இருந்து வருகின்றனர்.

இவ்வாறு இருக்க நேற்றைய தினம் ராகவா லாரன்ஸ் ராகவேந்திரா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இரு படங்கள் பற்றிய செய்தியை இன்று வெளிவிட போவதாக கூறியுள்ளார்.

சமீபத்தில் பாலா செய்யும் உதவுகளை பார்த்து பாராட்டிய இவர் நீ எத்தனை குழந்தைகளை படிப்பிக்க விரும்புகின்றாயோ அத்தனை குழந்தைகளையும் நான் படிப்பிக்கின்றேன் என்று கூறினர்.

அதன் பின் பாலா, லாரன்ஸ் தயாரிக்கும் படத்தில் தான் கீரோவாக நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறினர் என்று அவருக்கு நன்றி தெரிவித்து கானொளி ஒன்றை வெளியிட்டார்.

தற்போது லரான்ஸின் இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் இதில் ஒன்று பாலாவின் படமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

more news