தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமான சூரி இன்று ஒரு கிரோவாகி விட்டார். இதற்கு இவருடைய கடின உழைப்புதான் காரணம்.
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பரோட்டா சூரியாக இடம்பிடித்தார். அதன் பின் இவருக்கு படவாய்ப்புகள் அதிகம் வர தொடங்கிவிட்டன.
இவ்வாறு இருக்க வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் கிரோவாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு வெற்றியை கொடுத்தது. பெரிதாக யாருக்கும் முதல் படம் வெற்றியை கொடுக்கமாட்டாது. வெற்றிமாறன் இயக்கியதால் அனைவரும் படம் பார்த்தார்கள். பார்த்ததும் இது சூரியா? என்று ஆச்சரியத்துடன் கேட்க ஆரம்பித்து விட்டனர்.
இதனை தொடர்ந்து பட படங்களில் கிரோவாக நடிக்க தொடங்கி விட்டார். கருடன், கொட்டுக்காளி,விடுதலை2 போன்ற படங்கள் ரிலீஸ் இற்கு தயாராக உள்ளன.
இவ்வாறு இருக்க கருடன் படம் நாளை வெளியாக உள்ளது. இப் படத்தின் புரமோஷன் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. இப் படத்திற்கு சூரி 8 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இயக்குனர் துரை செல்வராகவன் அளித்த பேட்டி ஒன்றில் இப் படத்தின் கதை வெற்றிமாறன் உடையது இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த படத்தின் ஐடியாவை சூரிதான் கூறினார். அதை வைத்து நாங்களே ஒரு கதையை எழுதினோம், என்றும் இப் படத்தின் கதாசிரியர் என்ற பெயரில் வெற்றிமாறனை போட அவரும் சம்மதித்து விட்டார் என்று கூறினார்.