நயன் நடித்த படத்தின் 2ம் பாகத்தில் திரிஷா!- நயனை கழட்டி விட்ட இயக்குநர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிக்கைகளாக இருப்பவர்கள் நயன்தாரா மற்றும் திரிஷா. இதில் நயன் அதிக சம்பளம் வாங்கி வந்தவர். அவர் ஒரு படத்திற்கு 10 தொடக்கம் 11 கோடி சம்பளம் வாங்கி வந்துள்ளார்.

திரிஷா சிறிது காலம் சினிமாவில் காணாமல் போய் விட்டார். ஆனால் தறப்போது ரீ என்றி கொடுத்துள்ளார். இவர் லியோ படத்திற்கு 5 கோடி சம்பளம் வங்கியுள்ளர். ஆனால் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடிக்க திரிஷாவிற்கு ரூ. 12 கோடி சம்பளம் என கூறப்படுகின்றது.

நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறி விட்டார். தற்போது இவருகான மார்கெட்டும் அதிகமாகி விட்டது.

நயன்தாரா நடிப்பில் வெளியான படம் தான் மூக்குத்தி அம்மன். இப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படத்தில் நயன்தாராவின் நடிப்பு நன்றாக இருக்கும். படத்தின் கருத்து நன்றாக இருந்தாலும் படத்தை கையாண்ட முறை நன்றாக இல்லை என்றும் கூறி வருகின்றனர். இப் படத்தை ஆர். ஜே பாலாஜி இயக்கியிருப்பார். அவரும் முக்கியமான ரோலில் நடித்திருப்பார்.

இவ்வாறு இருக்க இப் படத்தின் 2 ம் பாகத்தை எடுப்பதற்கு பாலாஜி முடிவெடுத்துள்ளாராம். ஆனால் இந்த படத்தில் நயன்தாரா நடிக்கவில்லையாம். திரிஷாவை வைத்து எடுக்ககவுள்ளாராம். ஏனெனில் தற்போது நயன்தாராவை விட திரிஷாவின் மார்க்கெட் தான் உயர்ந்துள்ளது. அதனால் தான் திரிஷாவை வைத்து இப் படத்தி எடுக்கவுள்ளார்.

இப் படத்தை வேறு தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளது என்பதால் இப் படத்தின் பெயர் மூக்குத்தி அம்மன் 2 ஆகிய இருக்காது என்றும் கூறப்படுகின்றது.

more news