ஆட்டோவில் வந்த கூல் சுரேஷ் ஐ காரில் அனுப்பிய ஆர் ஆர் பிரியாணி ஓனர்!

கூல் சுரேஷ் தமிழ் சினிமாவின் நகைசுவை நடிகராவார். 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். வெங்கடேஷ் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான படம் தான் சாக்லேட்.

சிலம்பரசன், ஜெயம் ரவி, சூர்யா, பார்த்திபன், ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை கவர்ந்துள்ளார்.

இவர் ஆரம்பத்தில் நல்ல நகை சுவை நடிகராக அனைவரது கவனத்தை பெற்றாலும் தற்போது இவரை பற்றி பெரிதும் பேசப்படவில்லை.

இதனால் திடீரென சமூக ஊடகங்களை கையில் எடுத்த இவர் பிரபலமாகி விட்டார்.

பல திரைப்படங்களின் முதல் நாள் முதல் காட்சி முடிவில் இவர் கூறும் விமர்சனம், ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் ஆகிவருகிறது. இதனால் பல நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மத்தியில் பேசப்படுகிறார்.

2023 ஆம் ஆண்டு விஜய் டிவியில் நடைபெற்ற பிக் போஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். ஒரு கேட்ட பெயருடன் பிக் போஸ் வீட்டிற்குள் வந்து நல்ல பெயருடன் திரும்பி சென்ற நபர் கூல் சுரேஷ் மட்டுமே.

இவ்வாறு இருக்க இவரிக்கு ஆர் ஆர் பிரியாணி ஓனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலில் போய்விட்டதாக இவருடைய கார் போய் விட்டது. இதை பற்றி ஆர் ஆர் பிரியாணி ஓனரிடம் சொன்னேன். இரண்டு நாட்கள் கழித்து வர சொன்னார் பிரியாணி தான் போடப் போகிறார் என நினைத்து அங்கு போனேன். ஆனால் அவர் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். என்று கூறினார்.

more news