துரை செந்தில் இயக்கத்தில் சூரியின் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை கருடன் படம் வெளியானது. வறண்டு போன நிலத்தில் மழை பெய்வது போல இந்த ஆண்டு வறண்டு கிடந்த சினிமாவிற்கு மழையை தந்தது சூரியின் கருடன் படம் தான்.
சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிப்பில் இந்த படம் வசூல் வேட்டையை நிகழ்த்தி வருகின்றது. இவ்வாறு இருக்க இந்த படம் ரிலீஸ் ஆகுவாதற்கு தடை ஏற்பட்டதாம். இப்படம் தயாரிக்கும் போது 7 கோடி கடன் ஏற்பட்டதாம்.
அந்த கடனை திருப்பி கொடுத்தால் மட்டுமே படம் ரிலீஸ் ஆகும் என்று கூற , உடனே சூரி தான் முன்வந்து நான் அதற்கு முழு பொறுப்பையும் ஏற்கின்றேன் என கையெழுத்து இட்ட பின்பு தான் படம் ரிலீஸ் ஆனது.
இதனால் அனைவரும் சூரிக்கு பெரிய மனசு என்று கூறிவருகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் சிவகார்த்திகேயன் போல நீங்களும் கடனாளி ஆகவேண்டாம் என்று அறிவுரையும் கூறி வருகின்றனர்.
வெண்ணிலா கபடி குழு மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவர் இன்று இவ்வளவு தூரம் வளர்துள்ளார் என்றால் அதற்கு அவருடைய விடமுயற்சியும், கடின உழைப்பும் தான் காரணம்.
இவ்வாறு இருக்க இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நான் இன்று கிரோவாக நடிப்பதற்கு சீமராஜா படத்தில் ஒரு நிமிட காட்சிக்காக நான் வைத்த சிக்ஸ் பாக் தான் காரணம் என்று கூறினார்.
நான் இதற்கு முதலில் மறுத்துவிட்டேன் இயக்குனரும் சிவகார்த்திகேயனும் தான் கட்டாய படுத்தி வைக்க சொன்னார்கள் என்று கூறினார். இடையில் மழை வந்து குழப்பியதால் அந்த காட்சியை எடுப்பதற்கு கூட ரொம்ப கஷ்டப்பட்டோம் என்றும் கூறினார்.
இவ்வாறு இருக்க படம் வெளியான முதல் நாள் 3 கோடியும், இரண்டாம் நாள் 4.5 கோடியும், மூன்றாம் நாள் 6.25 கோடியையும் வசூலித்துள்ளது. தற்போது 20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகின்றது.