சிம்புவை பற்றி தப்பாக பேசியதால் என்னுடன் அவர் கதைப்பதில்லை!-மாணிக்கம் நாராயணன் பேட்டி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்களில் நடிகர் சிம்புவும் ஒருவர். லிட்டில்  சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் டி. ராஜேந்திரனின் மகன் ஆவார். சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகனானர்.

2002 ஆம் ஆண்டு இவருடைய தந்தை இயக்கிய படமான காதல் அழிவதில்லை எனும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

இவர் தற்போது தக் லைப் படத்தில் நடித்து வருகின்றார். அதுவும் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பத்து தல படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இப் படத்திற்கு பின் தற்போது தக் லைப் படத்தில் நடித்து வருகின்றார். தக் லைப் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வருகின்றது.

இப் படத்தின் படபிடிப்பு சமயத்தில் சிம்பு ஒரே டேக்கில் நடித்து முடித்ததை பார்த்து மணிரத்தினம் இப்படி ஒரு நடிகரா? என ஆச்சரியப்பட்டுள்ளார். அவரை கூப்பிட்டு பாராட்டியும் உள்ளார்.

தக் லைஃப் படத்தின் படபிடிப்பு காரணமாக இவரின் அடுத்த படங்கள் தடைப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்க கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு இவருடைய 48 வது படம் பற்றி அப்டேட் வெளியானது.

அதில் இவர் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக போஸ்டரில் வெளியானது. ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்கவுள்ளார்.

இவ்வாறு இருக்க மாணிக்கம் நாராயணன் நான் சிம்புவை பற்றி தப்பாக பேசிவிட்டேன் . என்று ஒரு பேட்டியில கூறியுள்ளார்.

கௌதம் வாசுதேவ் மேனன் சிம்புவை வைத்து ஒரு படியான எடுக்கும் போது அதில் சில குளறுபடிகள் ஏற்பட்டது. அப்போது அவர் என்னிடம் உதவி கேட்டார். சிம்புவை வச்சி எல்லாம் படம் எடுக்கணும்னா அவங்க அப்பாவைக் கூப்பிடணும்னு சொன்னேன். 

 ஏன்னா அவரோட ஆட்டிட்டியூட் வேற. என்னோட ஆட்டிட்டியூட் வேற. அவங்க அப்பாவும் நானும் ரொம்ப க்ளோஸ். அவர் அதை சிம்புவிடம் கூறிவிட்டார். அதற்கு பின் அவர் என்னுடன் கதைப்பதில்லை என்று கூறிவிட்டார் என்று அவர் அளித்த பாட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

more news