வாடிவாசல் கதையை சூர்யாவுக்கு தெரியாமல் தெலுங்கு நடிகருக்கு சொன்ன வெற்றிமாறன்!-விலகுவாரா சூர்யா?

தமிழ் சினிமாவில் தான் இயக்கும் படங்கள் அனைத்தையும் வெற்றி படமாக கொடுத்த வருபவர் வெற்றி மாறன். இவர் தற்போது விடுதலை 2 படத்தை இயக்கி உள்ளார்.

இப் படம் ரிலீஸ் இற்காக காத்திருக்கின்றது. விடுதலை படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. வெற்றி மாறனின் படம் என்று சொன்னாலே அது வெற்றி படம் தான்.

இவ்வாறு தான் நடிகர் சூர்யாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் இறுதியாக நடித்த எதற்கும் துணிந்தவன் படம் தோல்வி படமாகவே அமைந்தது. இருப்பினும் இதற்கு முன்பு நடித்த சூரரை போற்று படம் இவருக்கு தேசிய விருதையே வாங்கி கொடுத்து விட்டது.

இவ்வாறு இருக்க தற்போது கங்குவா படத்தில் நடித்துள்ளார். இப் படத்தில் வரும் சண்டை காட்சி ரியலாக இருக்க வேண்டும் என்பதற்காக 10000 பேரை வைத்து எடுக்கபடுகின்றது. அது மட்டுமல்லாது படத்தின் பட்ஜெட் 350 கோடி ஆகும்.

இவ்வாறு இருக்க வாடிவாசல் திரை படத்தை வெற்றிமாறன் சூர்யாவை வைத்து எடுக்க உள்ளதாக கூறினார். அதன் பின் இப் படம் தொடர்பான எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதனால் இப் படத்தில் சூர்யா நடிக்கவில்லை என்று ரசிகர்கள் நினைத்து விட்டனர்.

வெற்றிமாறன் அதில் சூர்யா தான் நடிக்கவுள்ளார் என்று உறுதியாக கூறிவிட்டார். இவ்வாறு இருக்க தற்போது அந்தணன் பேட்டி ஒன்றில் வெற்றி மாறன் வாடிவாசல் கதையை தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு கூறிவிட்டார் என்று கூறியுள்ளார். இதனால் சூர்யா வெற்றிமாறன் மீது கோபத்தில் உள்ளார். இதனால் இப் படத்தில் சூர்யா நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாது ராம் சரண் கதை பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளாராம். முதல் முதலாக வெற்றி மாறனின் கதையை பிடிக்கவில்லை என்று கூறிய நபர் ராம் சரண் தான்.

more news