தக்லைஃப் இல் மீண்டும் இணையும் இரண்டு பிரபலங்கள்!-பட்டையை கிளப்பும் தக்லைஃப்

தக்லைஃப் படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நாயகனாக நடித்து வருகின்றார்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பின் விக்ரம் படத்தில் நடித்திருந்தார். இப் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, சிவானி, பகத் பாசில் போன்றோர் நடித்திருப்பார்.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக்லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இவரின் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப் படமும் மாபெரும் வெற்றியை தட்டி செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப் படத்தில் சிம்பு , துல்கர் சல்மான், ஜெயம் ரவி, த்ரிஷா, கௌதம் கார்த்திக், அபிராமி, நாசர், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ் போன்ற நடிகர் பட்டாளமே நடிக்கின்றனர்.

ஆரம்பத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி இருவரும் விலகுவதாக கூறி சென்று விட்டனர். அதற்கு பதிலாக சிம்புவை இறக்கி விட்டார் மணிரத்னம்.

இதன் பின் தாம் நடிப்பதாக மீண்டும் இருவரும் இணைந்தனர். அதனால் சிம்புவிற்கு இரட்டை வேடங்கக்களில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளனர்.

மணிரத்னம் சிம்புவின் நடிப்பை பார்த்து அரச்சரியப்பட்டுள்ளாராம். சிம்பு ஒரே டேக் இல் நடித்து முடித்ததால் மணிரத்னம் இப்படி ஒரு நடிக்கரா என சிம்புவை பாராட்டியுள்ளார்.

இவ்வாறு இருக்க அலிபாசல் மற்றும் பங்கஜ் திரிபாதி இருவரும் இணைந்துள்ளதாக கூறபடுகின்றது.

தற்போது அலிபாசல், சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த படப்பிடிப்பில் பங்கஜ் திரிபாதி இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

எப்படியும் இப் படம் வெற்றியின் உச்சத்தை தொடும் என ரசிகர்களால் நம்பபடுகிறது.