சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் தி ப்ரூஃப். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின்னின் பேச்சால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
ராதிகா மாஸ்டர் இயக்கியுள்ள படம் தான் தி ப்ரூஃப்.
இயக்குனரான மிஷ்கின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மாவீரன்மற்றும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படங்களில் நடித்திருந்தார்.
இவ்வாறு இருக்க , தி ப்ரூஃப் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய இவர்;
கோயிலுக்கு போகதீங்க தியேட்டருக்கு போங்க, வெங்காயம் வெட்டிக்கிட்டே சினிமா பார்பீர்களா?புருஷன் கூட சண்டை போட்டுக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா? புது டிரெஸ் போட்டு பர்ஃப்யூம் அடித்துக் கொண்டு காரில் ஜம்முன்னு தியேட்டருக்கு சென்று பாப்கார்ன் வாங்கிக் கொண்டு படத்தை அப்படி பார்க்க வேண்டும் என அவர் கூறியிருப்பார்.
இதை பார்வையிட்ட ரசிகர்கள் கோயிலுக்கு போனாலாச்சும் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும். நீங்க எடுக்கிற படத்தை பார்த்த எங்களுக்கு எல்லா வருத்தமும் வந்திடும் என்று படி பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.
இவ்விழாவில் கலந்து கொண்ட யூகி சேதுவும் இவரை வைத்து கலாய்த்து இருப்பார்.
மிஷ்கின் நன்றாக சிரிப்பார் ஆனால் எப்போதுமே கோபத்துடனே முகத்தை வைத்துக் கொள்வார். மிஷ்கின் கண்கள் அழகாக இருக்கும் ஆனால் கருப்பு கண்ணாடி போட்டு மறைத்து விடுவார். பகலிலேயே எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் பலருக்கும் வித்தியாசம் தெரியாது. ஆனால் இவர் இரவில் கூட கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு ஊசி நூல் கோர்ப்பார் என இவரை நன்றாக கலாய்த்து
அதற்கு மிஷ்கின், என்னும் நிகழ்ச்சியே முடில அதுக்குள்ள ஒருத்தன் யூட்டியூப்ல, மிஷ்கினை பங்கமாய் கலாய்த்த யூகி எண்ணு வீடியோ போட்டுடான் என்றும் பேசியிருந்தார்.