காஞ்சனா 4 இல் நடிக்கிறாரா பாலா?- உண்மையை கூறிய பாலா!

ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பூக்கள் போன டிவி சேனல் என்றால் அது விஜய் டிவி தான். விஜய் டிவிக்குள் சென்று பலர் நடிகர்களாக திரும்ம்பியுள்ளனர். சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் இவர்கள் எல்லாம் விஜய் டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்கள் தான்.

இந்த வரிசையில் பாலாவும் ஒருவர். இவர் விஜய் டிவியில் இடம்பெற்ற கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பல காமெடிகளை செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இதன் பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதன் பின் இவர் பல படங்களில் காமெடியானாக நடிப்பதற்கு வாய்ப்புகளும் கிடைத்தது.

இவர் பல மக்களுக்கு உதவி செய்து கொண்டு வருகின்றார். பாலாவின் உதவி செய்யும் மனதை பார்த்த ராகவா லாரன்ஸ் பாலா எத்தனை குழந்தைகளை படிபிக்க விரும்புகிறரோ அத்தனை குழந்தைகளையும் தான் படிபிப்பதாக கூறியுள்ளார்.

தற்ப்போது லாரன்ஸ் உடன் பலவும் இணைந்து மாற்றம் அறக்கட்டளை அமைப்பின் மூலம் பல மக்களுக்கு உதவி செய்து வருகின்றார். அதுவும் கொரோனா சமயத்தில் இவரின் உதவிகள் மக்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.

இவர் ஒரு வீடியோவில் தனக்குள் உதவி செய்தும் எண்ணத்தை விதைத்தவர் விஜய்காந்த் என்றும் அவருடைய சமாதியை தரிசிக்க வந்த எனக்கு அவர் முன்னிலையில் உதவி செய்தும் வாய்ப்பு கிடைத்தது மிக்கபேரிய விடையமாக கருதுகின்றேன் என்றும் கூறியுள்ளார்.

பாலாவின் உறவினர்கள் உன்னுடைய மகன் இவ்வாறு கொடுத்து கொண்டு இருந்தால் கடைசியில் பிச்சைதான் எடுக்கணும் என்று கூறினர். அதற்கு பாலாவின் பெற்றோர் என்னுடைய மகன் குடிக்கவில்லை,புகைபிடிக்கவில்லையே உதவிதானே செய்கின்றான்.

எங்களுடைய வீட்டு தேவைக்கு தந்து மிகுதி பணத்தைதான் மற்றவர்களுக்கு கொடுத்து உதவுகிறான். அப்படி ஒரு மகன் கிடைபதற்கு தாம் கொடுத்து வைத்துள்ளோம் என்று கூறினர்.

இவ்வாறு இருக்க பாலா இன்று ஒரு ஹோட்டல் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு வந்த பத்திரிக்கையாளர்கள் காஞ்சனா4ல் நீங்கள் எந்த கேரக்டரில் நடிக்கிறீர்கள்? என கேட்டனர். அதற்கு பதில் அளித்த பாலா காஞ்சனா 4ஐ முதல் ஆளாக பார்க்க வேண்டும் என்ற ஒரு கேரக்டரில் நான் இருக்கிறேன் என தமாஷாக பதில் கூறினார்.

நான் அதில் நடிக்கவேண்டுமா?இல்லையா? என்பதை லாரன்ஸ் மாஸ்டர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

More News