இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் திரைப்படம் தான் இந்தியன் 2.
இயக்குநர் ஷங்கரின் இயக்க, சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைக்கா தயாரிப்பகம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. இ
இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால்,பிரியா பவானி சங்கர், சித்தார்த், நெடுமுடி வேணு, ராகுல் ப்ரீத் சிங் போன்றோர் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளார்.
சென்னைக்கு அருகே தனியார் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வந்த படப்பிடிப்பில் 19 பிப்ரவரி 2020 ம் தேதி இரவு விபத்து நடைபெற்றது. இதில் மூன்று நபர்கள் உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரணத் தொகை திரைப்பட தொழிலாளர் சங்கம் மூலம் வழங்கப்பட்டது. உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு லைகா நிறுவனம் 2 கோடி ரூபாய், கமல்ஹாசன் 1 கோடி ரூபாய் மற்றும் இயக்குநர் ஷங்கர் 1 கோடி ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கினார்கள்.
இந்தியன் 2 ஆரம்பத்தில் ஜூன் மாதம் ரிலீஸ் செய்வதாக போஸ்டரில் அறிவித்திருந்தனர். ஆனால் அவர்கள் தேதியை குறிப்பிடவில்லை. தேதியை கமல் காலால் மறைப்பது போல் தான் அந்த போஸ்டர் ரிலீஸ் ஆனது.
ஆனால் தற்போது ஜூலை 17 வெளியாவுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. ஜூலை 17 மொகரம் பண்டிகை என்பதால் அன்ரு வெளியாகுவதாக தெரிவிக்கபடுகின்றது.