ஆடு எனப்படுவது ஓர் தாவர உண்ணி பாலூட்டி விலங்காகும். அதாவது தென்மேற்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பாவை தாயகமாக கொண்டு காணப்படுவதோடு வெகு காலத்திற்கு முன்பாகவே மனிதர்களோடு பழக்கப்பட்ட விலங்காகவும் திகழ்கின்றது.
ஆடுகளானவை இறைச்சி, பால், முடி, தோல் போன்றவற்றிற்காக வளர்க்கப்படுவதோடு இன்று செல்ல விலங்குகளாகவும் வீட்டில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
ஆண் ஆடு வேறு பெயர்கள்
- கடா
- தகர்
- அப்பர்
- உதள்
- மோத்தை
ஆட்டின் பயன்பாடுகள்
இன்று மனிதர்கள் இறைச்சி மற்றும் பாலினை பெறுவதற்காக ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.
மேலும் ஆட்டிறைச்சியானது பொதுவாக தெற்காசியா நாடுகளில் கோழி இறைச்சிக்கு பிறகு பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றதோடு பல்வேறு இதய நோய்களுக்கான சிறந்ததோர் தீர்வாகவும் ஆட்டிறைச்சி காணப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும்.
You May Also Like: