மண்ணாங்கட்டி படப்பிடிப்பு நிறைவை கொண்டாடிய நயன்தாரா!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது அன்னபூரணி, ஜவான் ஆகிய படங்களில் நடித்திருப்பார். அன்னபூரணி ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது மட்டுமல்லாது ஓடிடியில் இருந்தும் தூக்கபட்டது.

ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 39 வயதுகள் கடந்த நயன் திருமணம் செய்து விட்டார். ஆனால் திரிஷா 45 வயதுகள் கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றார்.

இதனால் லேடி சூப்பர் ஸ்டாரின் இடத்தை திரிஷா பிடித்து விட்டார் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இவ்வாறு இருக்க நடிகர் யாஸ் நடிக்கும் படத்தில் யாஷிக்கு அக்காவாக நடிக்க போவதாக தகவல் வெளியானது.

கீத்து  மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் டாக்சிக். இப்படத்தில் யாஷுடன் இணைந்து அவருடைய சகோதரி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்கவிருந்தார். ஆனால் தற்போது அவர் விலகிவிட்டார்.

அவருடைய இடத்திக்கு நயன் தாவியுள்ளார். கீத்து  மோகன்தாஸ் நயனிடம் கதை சொல்ல நயனும் ஓகே சொல்லி விட்டாராம். ஆனால் அதற்கு 20 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.

இவ்வாறு இருக்க அன்னபூரணி படத்தைத் தொடர்ந்து நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960.ப்ளாக் ஷீப் யூடியூப் சேனல் புகழ் ட்யூட் விக்கி இயக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் நயன்தாரா தவிர, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.தற்போது படபிடிப்பு முடிவடைந்த நிலையில் கேக் வெட்டி கொண்டாடிய புகைபடங்கள் வெளியாகியுள்ளன.

more news

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*