குடும்ப உறவுகளின் சிறப்பு கட்டுரை

kudumba uravugal sirappu katturai in tamil

மகிழ்ச்சிகரமான வாழ்வின் அடிப்படையே குடும்ப உறவுகளாகும் என்ற வகையில் ஓர் மனிதனானவன் தனித்து வாழ்வதை விட தனது குடும்பத்துடன் வாழ்கின்ற போதே சிறந்த வாழ்க்கையை வாழ்கின்றான். குடும்பமே மனித வாழ்வின் பயிற்சி கூடமாக திகழ்கின்றது.

குடும்ப உறவுகளின் சிறப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • குடும்ப உறவுகளின் சிறப்புக்கள்
  • நட்புறவை பேணுவதில் குடும்ப உறவு
  • வாழ்வின் வழிகாட்டி
  • குடும்ப உறவை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள்
  • முடிவுரை

முன்னுரை

எமது சமூகமானது சிறந்து விளங்க வேண்டுமாயின் குடும்ப உறவை பேணுதல் அவசியமானதாகும். குடும்ப உறவோடு கூடி வாழ்கின்ற போதே மனித இனத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதோடு நிம்மதியான வாழ்வினையும் வாழ முடியும். இக்கட்டுரையில் குடும்ப உறவுகளின் சிறப்பு பற்றி நோக்கலாம்.

குடும்ப உறவுகளின் சிறப்புக்கள்

குடும்பம் என்பது மனித வாழ்வில் மிக முக்கியமானதொன்றாகும். குடும்ப அமைப்பானது கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர்கள், உடன் பிறப்புக்கள் என ஒற்றுமையாக வாழும் ஓர் உறவு முறையே குடும்ப உறவாகும்.

குடும்ப உறவுகளை பேணுவதனூடாக எம்மிடத்தில் அன்பானது வளர்க்கப்படுகின்றது. மேலும் குடும்ப உறவுகளாலேயே ஒற்றுமை வலுப்படுத்தப்படுவதோடு எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்.

பண்டைய காலத்தில் இந்திய சமூகத்தில் குடும்பம் என்பது தனது கலாச்சாரத்தின் அடையாளம் என்ற சிறப்பினை பெற்று காணப்பட்டது.

மேலும் சமூக பொருளாதார ரீதியாக ஒரு மனிதனானவன் முன்னேறுகின்றான் என்றால் அதற்கானதொரு பிரதானமான காரணம் அவனது குடும்ப உறவுகளே ஆகும்.

இன்றும் எம்முள் காணப்படும் சிறந்த பண்புகளான விட்டுக்கொடுப்பு, பொறுமை போன்றவற்றை கற்றுத் தருவதும் குடும்ப உறவுகளே என்ற வகையில் பல்வேறு சிறப்பு மிக்கதே குடும்ப உறவுகளாகும்.

நட்புறவை பேணுவதில் குடும்ப உறவு

தோழமை, சினேகம் என சிறந்த பண்புகள் வளர்வதற்கான அடித்தளத்தினை ஏற்படுத்துவதே குடும்ப உறவாகும். விருப்பு வெறுப்புக்களை அனுசரித்து நட்புறவை பேணுவதில் குடும்ப உறவுகள் சிறப்பிடம் பெறுகின்றது. எமது துன்பத்தின் போது எம்மை தாங்கிப் பிடித்து தேற்றுபவர்களாகவே குடும்ப உறவினர்கள் காணப்படுகின்றனர்.

வாழ்வின் வழிகாட்டி

எமது வாழ்க்கைக்கான சிறந்த வழிகாட்டி குடும்ப உறவுகளாகும் என்ற வகையில் பாசமொழியை கற்றுத் தருவதோடு மட்டுமல்லாது மனிதர்களை மதிக்கக் கற்றுத் தரவும், எதிர்கால வாழ்வின் சிறப்பான திட்டமிடலை மேற்கொள்ளவும் குடும்ப உறவுகள் அடித்தளமிடுகின்றனர்.

மேலும் சவால்களை எதிர்கொண்டு எவ்வாறு தனது இலக்கை நோக்கி அடைந்து கொள்ள முடியும் என்பது தொடர்பாக எம்மை வழிகாட்டும் வழிகாட்டிகளும் குடும்ப உறவுகளாகும்.

குடும்ப உறவை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள்

குடும்ப உறவுகளை வலுப்படுத்துவது அவசியம் என்ற வகையில் அதனை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை நோக்கலாம்.

அதாவது குடும்ப உறவுகளிடையே விட்டுக் கொடுத்தல் மனப்பான்மை காணப்படல், சிறந்த முடிவுகளை எடுக்க வாய்ப்பளித்தல், ஒரு நாளில் ஒரு முறையாவது ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுதல், விடுமுறை காலங்களில் சுற்றுலாச் செல்லுதல், உறவுகளிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தல், அனைவரும் கலந்தாலோசித்து ஒரு பிரச்சினைக்கு தீர்வு காணல், ஒற்றுமையாக இருத்தல் என பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாக உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

முடிவுரை

குடும்ப உறவுகளே எமது வாழ்வின் வெற்றியாகும் என்றடிப்படையில் உறவுகளுக்குள் எத்தகைய சண்டைகள் வந்தாலும் அதனை மறந்து உறவை பேணுபவர்களே வாழ்வை சிறப்பாக வாழ்கின்றனர். அந்த வகையில் எமது குடும்ப உறவுகளை மதித்து நடப்பது அனைவரதும் கடமையாகும்.

You May Also Like:

முதியோர் பற்றிய கட்டுரை

பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு கட்டுரை