விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற நண்பனுக்கு கடிதம்

vilayattu potti vetri petra nanbanukku kaditham

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற நண்பனுக்கு கடிதம்

மதுரை
20.12.2023

அன்புள்ள நண்பன் பிரதீப்,

நான் இங்கு நலமாக இருக்கின்றேன். நீ நலமாக இருக்கின்றாயா? உன் பெற்றோர்கள் நலமா? இன்றைய செய்தித்தாளை புரட்டிய போது மிக்க மகிழ்ச்சியடைந்தேன். ஆம் செய்தித் தாளின் முதல் பகுதியில் மாவட்ட அளவிளான உயரம் பாய்தல் போட்டியில் நீ முதலிடம் பெற்ற செய்தியை அறிந்து கொண்டேன்.

இதனை எனது பெற்றோரிடமும், நம் நண்பர்களிடமும் காண்பித்தேன். அவர்கள் அனைவரும் உன்னை மனம் மகிழ பாராட்டினார்கள். அடுத்து மாநில அளவில் நடக்க போகும் போட்டியில் கலந்து கொண்டு நீயே வெற்றி வாகை சூட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நீ விளையாட்டு துறையில் மட்டுமல்லாமல் கல்வியிலும் சிறந்து விளங்க நான் இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். உனது வெற்றிப் பயணமானது மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
உன் அன்புள்ள தோழன்,
கமல்

உறைமேல் முகவரி

பெறுநர்:
ப.பிரதீப் 18, காந்திதெரு
விருதுநகர்

You May Also Like:

நாளைய உலகம் நம் கையில் கட்டுரை