நாளைய உலகம் நம் கையில் கட்டுரை

nalaya ulagam nam kaiyil katturai in tamil

நாளைய உலகம் நம் கையில் என்பதானது நாம் இன்று உலகத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளான அறிவு, தொழில் நுட்ப ரீதியான வளர்ச்சிகளிலேயே காணப்படுகின்றது.

சிறப்பான எதிர்காலத்திற்கு வித்திடக்கூடிய வகையில் பல்வேறு தொழில் நுட்பங்களை மேற்கொள்கின்ற போதே எமது நாளைய உலகமானது சிறப்பான வாழ்க்கைக்கு துணைபுரியும்.

நாளைய உலகம் நம் கையில் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நாளைய உலகில் தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி
  • இளைஞர்களும் ஊடகப் பாவனையும்
  • போதைப் பாவனையை ஒழித்தல்
  • எதிர்காலத்தை வளமாக்கும் கல்வி
  • முடிவுரை

முன்னுரை

இன்று நாம் நல் வாழ்வை வாழ்கின்றோமேயாயின் அதற்கான பிரதான காரணம் நாம் தான் அந்த வகையில் இன்று உள்ளங்கையில் உலகம் என்றளவிற்கு தொழில் நுட்ப வளர்ச்சியானது காணப்படுகின்றது.

நாளைய உலகத்தை சிறப்பானதாக மாற்ற வேண்டுமாயின் சிறந்த எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

நாளைய உலகில் தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி

நாளைய உலகம் நம் கைக்குள் என்பதானது தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினூடாகவே காணப்படுகின்றது.

மனிதர்களது அறிவியல் வளர்ச்சியானது தொலை தூரத்தில் இருப்பவர்களுடன் தான் இருந்த இடத்தில் இருந்து கொண்டு பேசக்கூடியளவிற்கு வளர்ந்துள்ளது.

இணையத்தின் ஊடாக எந்தவொரு தேசத்தில் இடம் பெறும் நிகழ்வுகளையும் எம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.

அந்த வகையில் இன்று கைத்தொலைபேசிகள், கணினி என பல்வேறு சாதனங்களின் பயன்பாடானது வளர்ந்து கொண்டே வருகின்றது என்றடிப்படையில் நாளைய உலகின் வளர்ச்சியானது எம் கைகளில் அடங்கியுள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இளைஞர்களும் ஊடகப் பாவனையும்

இளைஞர்களானவர்கள் சிறந்த முறையில் செயற்படுவதன் மூலமே எமது எதிர்காலமானது சிறக்கும் என்ற வகையில் இன்று பல இளைஞர்கள் சமூக வலைத்தளத்திற்கு அடிமையாகிக் கொண்டே வருகின்றனர்.

அந்த வகையில் சமூக வலைத்தளங்களால் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாவதோடு மட்டுமல்லாமல் குற்றங்கள், மிரட்டல்கள், போலியான தகவல்கள் என பல்வேறு சவால்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

சமூக ஊடகத்தில் தேவையற்ற செயற்பாட்டை இயன்றளவு குறைத்து சிறந்த முறையில் பயன்படுத்துவது எமது எதிர்காலத்தை சிறப்புற வாழ்வதற்கான வழியாகும்.

ஓர் நாட்டின் எதிர்காலம் இளைஞர்களே என்ற கூற்றிற்கிணங்க நாட்டை முன்னேற்றுவதில் பிரதானமான பங்கினை இளைஞர்களே வகிக்கின்றனர் என்றடிப்படையில் வளமான எதிர்காலத்தை பெற இளைஞர்கள் சமூக ஊடகத்தை ஆரோக்கியமான செயற்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.

போதைப் பாவனையை ஒழித்தல்

போதைப் பாவனையானது இன்று அனைவரையும் ஆட் கொள்ளும் ஓர் உயிர் கொல்லியாக காணப்படுகின்றது. இன்று மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் போதைப் பாவனைக்கு அடிமையாகி வருகின்ற நிலையே காணப்படுகின்றது.

இப்போதையினால் பல்வேறுபட்ட நோய்கள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் சமூக விரோத செயல்கள் இடம் பெறுவதற்கும் இதுவே பிரதான காரணமாக உள்ளது.

இத்தகைய நிலையிலிருந்து நாளைய உலகை காப்பதற்கு அரசு இதற்கெதிராக கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்தி போதை வியாபாரிகளை கண்டறிந்து சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.

எதிர்காலத்தை வளமாக்கும் கல்வி

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் சிறந்த எதிர்காலத்தை பெற வேண்டுமாயின் அதற்கு சிறந்ததொரு வழியே கல்வி கற்பதாகும்.

கல்வியே ஓர் நாட்டை அபிவிருத்தி செய்யவும், வறுமையை போக்கவும், சமூக ரீதியில் மட்டுமல்லாது பொருளாதார ரீதியிலும் எம்மை உயர்ந்த இடத்தில் வைக்கக்கூடியதாகும்.

அனைவரும் கல்வியின் அவசியத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் இதுவே நாளைய உலகை வெற்றிகரமாக வெல்வதற்கு துணைபுரியும்.

மேலும் கல்வி கற்க அனைவரையும் தூண்டுவதும் எமது கடமையே ஆகும். ஏனெனில் நாம் கற்கும் கல்வி எமக்கு சிறந்த பண்புகளை கற்றுத் தந்து ஆரோக்கியமான சமூக மேம்பாட்டிற்கு அடித்தளமாக உள்ளது.

முடிவுரை

இந்த உலகத்தையே மாற்றியமைக்கும் வகையில் பல தொழில் நுட்பங்கள் வளர்ச்சி கண்டாலும் அதனை சரியான முறையில் பயன்படுத்துகின்ற போதே எம்மால் இந்த உலகில் சிறப்பாக வாழ முடியும்.

நாளைய உலகமே எம் ஒவ்வொருவரினதும் கையில் என்பதனை உணர்ந்து எதிர்காலத்தை சிறப்பாக மாற்றக் கூடிய வழிமுறைகளை பின்பற்றுவது அனைவரதும் கடமையாகும்.

You May Also Like:

கணினியும் அதன் பயன்பாடும் கட்டுரை

இயற்கை சீற்றம் தடுக்கும் முறைகள் கட்டுரை