பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு கட்டுரை

பாருக்குள்ளே சிறந்த நாடாக திகழ்வது பாரதநாடாகும். விவேகத்திலும், வீரத்திலும், அறிவிலும் சிறந்த மக்களை கொண்டதொரு நாடாக எம் பாரத நாடு காணப்படுகின்றது.

பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பாரத நாட்டின் சிறப்புக்கள்
  • கல்வி
  • பாரதமொழி
  • மருத்துவம் போற்றும் பாரதம்
  • முடிவுரை

முன்னுரை

பாருக்குள்ளே நல்ல நாடு எம் பாரத நாடு என்ற பாரதியாரின் கூற்றிற்கிணங்க பாரத தேசமானது சிறந்த பாரம்பரியத்தையும், உயர்ந்த பண்பாட்டினையும் உடையதொரு நாடாகும். மேலும் நீர்வளம், நிலவளம் மற்றும் கலைவளம் மிக்கதொரு நாடாகவும் திகழ்கின்றது என்ற வகையில் பெருமைமிக்கதொரு நாடே எம் பாரத நாடாகும்.

பாரத நாட்டின் சிறப்புக்கள்

பல்வேறு நாடுகள் காணப்படுகின்ற போதிலும் ஓர் சிறப்பு மிக்கதொரு நாடாக காணப்படுவதே பாரத நாடாகும். அறிவு, வீரம், ஆன்மிகம் என அனைத்திலும் சிறப்புமிக்கதொரு நாடாக பாரத நாடு காணப்படுகின்றது.

உலகில் மிக உயர்ந்த மலையாகிய இமயமலை மற்றும் வற்றாத கங்கை நதி போன்றவற்றை கொண்டமைந்ததொரு நாடாகும்.

மேலும் கௌதம புத்தர் தோன்றியமையினை எடுத்தியம்புவதாகவும், இன, மத வேறுபாடுடைய நாடாக காணப்படினும் மக்கள் ஒற்றுமை பேணப்படக்கூடியதொரு நாடகவும் பாரதம் காணப்படுகின்றமை பாருக்குள்ளே பாரதம் என்பதனை எடுத்துக்காட்டுகின்றது.

கல்வி

பாரத தேசமானது இன்று கல்வி அறிவில் சிறந்து விளங்கும் ஓர் தேசமாகும். பல சாதனையாளர்களை தன்னகத்தே கொண்டமைந்து காணப்படும் ஓர் நாடகும்.

அதாவது பூச்சியத்தை கண்டுபிடித்து நடைமுறைப்படுத்திய பெருமை இந்தியர்களையே சாரும்.

அதேபோன்று கல்வியில் முக்கியத்துவமிக்கதொரு நாடகவும் காஞ்சி, தட்சசீலம், உஜ்ஜயினி போன்ற இடங்களில் பல சர்வதேச பல்கலைக்கழகங்கள் உள்ளது பாரதத்தின் பொருமையினை பறைசாற்றுகின்றன.

பாரதமொழி

பாரத நாட்டில் பல மொழிகளை பேசும் மக்கள் காணப்படுகின்றனர் என்ற அடிப்படையில் தமிழ், இந்தி, மராத்தி, தெலுங்கு சமஸ்கிருதம் என பல மொழிகள் காணப்படுகின்றன.

பாரத நாட்டில் பல காலச்சாரங்களை உடைய மக்கள் காணப்படுகின்ற போதிலும் அவர்கள் ஒற்றுமை மிக்கவராக திகழ்கின்றமை சிறப்பிற்குரியதாகும்.

மேலும் பாரத தேசத்தில் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு மொழியாக இந்தி மொழி காணப்படுவதோடு இன்று பண்மைத்துவம் போற்றப்படுகின்ற ஓர் நாடாகவும் பாரதம் காணப்படுகின்றது.

மருத்துவம் போற்றும் பாரதம்

பாரத நாட்டின் மருத்துவ துறையானது மிகவும் தொன்மையானதென்றாக காணப்படுகின்றது.

அந்த வகையில் மருத்துவ துறையில் தலைசிறந்த நாடாக பாரதம் காணப்படுவதோடு இன்று பல நாடுகளில் இருந்தும் மருத்துவ சிகிச்சைக்காக பாரததேசத்திற்கே வருகை தருகின்றமை மருத்துவ துறையின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றது.

பல்வேறு மருந்துகள் கண்டுபிடிக்கப்படல் மற்றும் சித்தமருத்துவம், ஆயுர்வேதம் என மருத்துவ துறையில் சிறப்புமிக்கதொரு நாடாகவும் பாரதம் வளர்ச்சி கண்டுவருகின்றது.

முடிவுரை

பாருக்குள்ளே பாரத நாடு என்ற வகையில் பல்வேறுபட்ட துறைகளில் வளர்ச்சியடைந்து கொண்டுவரும் நாடாக பாரதமானது காணப்படுகின்றது. எம் பாரதத்தின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு தனிமனிதனும் பங்களிப்பு செய்வது அனைவரதும் கடமையாகும்.

You May Also Like:

சுதந்திர இந்தியா கட்டுரை

இந்தியா சுதந்திரம் அடைந்த வரலாறு கட்டுரை