கலைஞர் கருணாநிதி வரலாறு கட்டுரை

kalaignar karunanidhi katturai

முத்தமிழறிஞர் என்று அழைக்கப்டுபவரும் தமிழக முதல்வராக பதவி வகித்தவருமே கலைஞர் கருணாநிதி ஆவார்.

தமிழக அரசியல் வரலாற்றில் தன்னுடைய அயராத உழைப்பால் தடம் பதித்தவராக கலைஞர் காணப்படுகின்றார் என்றவகையில் அவரது ஆட்சியானது சிறப்புமிக்கதாகவே திகழ்கின்றது.

கலைஞர் கருணாநிதி வரலாறு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஆரம்பகால வாழ்க்கை
  • அரசியல் வாழ்க்கை
  • ஆட்சித்திறன்
  • படைப்புக்கள்
  • முடிவுரை

முன்னுரை

அரசியல், சினிமா என பல துறைகளில் முக்கியத்துவமிக்கவராக திகழ்ந்த கலைஞரானவர் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்தமை சிறப்பிற்குரியதாகும்.

தமிழக முதல்வராக ஐந்து தடவை பதவி வகித்தவரும் பன்முக ஆற்றல் கொண்டவருமான கலைஞர் கருணாநிதி வரலாறு பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

ஆரம்பகால வாழ்க்கை

கலைஞர் கருணாநிதி அவர்கள் 1924ம் ஆண்டு ஜுன் 3ம் திகதி திருவாவூர் மாவட்டத்தில் பிறந்தார். இவர் முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவராவார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் தட்சிணா மூர்த்தி ஆகும். இப்பெயரையே கருணாநிதி என மாற்றி வைத்துகொண்டார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை திருக்குவளையில் கற்றதோடு உயர்நிலை பள்ளியை திருவாவூர் பள்ளியில் கற்றார். மேலும் இவர் நாடகம், கவிதை, இலக்கியம் போன்றவற்றில் ஆர்வமுடையவராக திகழ்ந்ததோடு இதற்கு பிற்பட்ட காலங்களில் அரசியலிலும் ஈடுபாடு காட்டிக்கொண்டே வந்தார்.

அரசியல் வாழ்க்கை

கலைஞர் அவர்கள் அரசியலில் பெரிதும் ஈடுபாடுடையவராக காணப்பட்டார். தனது 14வது வயதில் சமூக இயக்கங்களில் ஈடுபட்டதோடு இந்திய எதிர்ப்பு போராட்டதினூடாக தன்னை அரசியலில் ஈடுபடுத்தி கொண்டார்.

1967ம் ஆண்டு அண்ணாதுரை தலைமையில் உருவாக்கப்பட் அமைச்சரவையில் பொதுப்பணி அமைச்சராக கடமையாற்றி வந்தார். மேலும் பிற்பட்ட காலங்களில் திராவிட முன்னேற்ற தமிழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை சிறப்பிற்குரியதாகும்.

கலைஞர் அவர்கள் 1969ல் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தமை இந்திய தேசத்தின் பெருமையினையே சுட்டிநிற்கின்றது. அரசியல் வரலாற்றில் சிறப்புமிக்க அரசியலை மேற்கொண்டவர் கருணாநிதி ஆவார்.

ஆட்சித்திறன்

கலைஞர் கருணாநிதியுடைய ஆட்சியானது வரலாற்றில் சிறப்புமிக்கதாகவே திகழ்கின்றது.

அதாவது 1969ல் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதன் பின்னர் மக்களுக்காக பல்வேறு நல்வாழ்வு திட்டங்களை கொண்டு வந்தவராக காணப்படுவதோடு மக்களின் நலனில் அக்கறை கொண்டும் பல சேவைகளையும் ஆற்றி வந்தவராவார். கலைஞருடைய ஆட்சியானது மக்களின் நலன் பேணக்கூடியதாகவே காணப்பட்டது.

படைப்புக்கள்

முத்தமிழறிஞராக திகழும் கருணாநிதி அவர்களது படைப்புக்கள் அளப்பரியதாகவே காணப்பட்டன.

அதாவது 75 திரைப்படங்களின் கதை, திரைக்கதை, வசனங்கள் போன்றவற்றை எழுதியமை, 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும், 15 நாவல்களையும் படைத்தமை.

மேலும் சிலப்பதிகாரம் மற்றும் உதயசூரியன் போன்ற நாடகங்களை படைத்தல், தூக்கு மேடை, பராசக்தி, காவல் கைதிகள், ராஜகுமாரி போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவராக கலைஞர் காணப்படுகின்றார்.

முடிவுரை

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறானது சரித்திரம் போற்றப்படக்கூடியதாக காணப்படுவதோடு மட்டுமல்லாமல் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் சிறந்த மனிதராகவும் இவர் திகழ்கின்றமை சிறப்பிற்குரியதாகும். மேலும் இவர் தமிழ் மொழி மற்றும் காலாச்சாரத்தின் வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்தவருமாவார்.

You May Also Like:

பெரியார் வழியில் கலைஞர் கட்டுரை

தொலைநோக்கு சிந்தனையாளர் கலைஞர் கட்டுரை