குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி வழக்கமாக தை அல்லது மாசி மாதம் ஆரம்பித்து விடும். இம் முறை சற்று தாமதமாக ஆரம்பமாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் இருந்து செப் வெங்கடேஷ் பட்(Venkatesh Bhat) விலகியுள்ளார்.

இந் நிகழ்ச்சி ஒளிபரப்பாக தாமதம் ஆனதிற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்க கூடும். இந் நிகழ்ச்சி ஒளிபரப்பாக தாமதம் ஆனமையால் குக் வித் கோமாளி சீசன்-4 உடன் முடிவிற்கு வந்துவிட்டது என்ற வதந்தி சமூக வலை தளங்களில் பரவியாதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படித்தி விட்டது.

குக் வித் கோமாளி சீஷன்-5 இல் செப்-வெங்கடேஷ் பட்ற்கு பதிலாக செப்-ரங்கராஜ் தான் நடத்த போவதாக கூறப்படுகின்றது.

இந் நிலையில் குக் வித் கோமாளி சீஷன்-5 போட்டியாளர்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

அதில் ஸ்ரீகாந்த் தேவா, இர்ஃபான், பிரியங்கா, கிருஷ்ணா மெக்கன்சி, நடிகர் கணேஷ், திவ்யா துரைசாமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வசந்த், ஷாலின் ஜோயா உள்ளிட்ட போட்டியாளர்கள் குக் வித் கோமாளி 5ல் பங்கேற்றுள்ளனர் என உறுதியாக கூறப்படுகிறது. இதில் கோமாளிக்கலா புகழ், பாலா, குரேஷி, சுனித்தா, ராமர், ஆகியோரின் பெயரும் கூறப்படுகின்றது.

More News