மீண்டும் கவினை தேடி வந்த படம்!

கவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். `இவர் நடித்த லிப்ட் மற்றும் டாடா படங்கள் இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தன. இவர் இறுதியாக நடித்த ஸ்டார் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இருப்பினும் இவருக்கு பல படவாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது. கிஸ் திரைப்படம், நெல்சன் தயாரிப்பில் வெளியாகும் பிளடி பெக்கர் திரைப்படம், மாஸ்க் திரைப்படம் என வரிசையாக நிறைய படங்களில் நடித்து வருகின்றார்.

இவருக்கு பல பட வாய்ப்புகள் வருவதால் அவருடைய சம்பளத்தை 10 கோடியாக அதிகரித்துள்ளார். வெறும் லட்சங்களில் சம்பளம் வாங்கி வந்த இவர் ஒரு படத்திற்கு 10 கோடி கேட்பது அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக கவினிடம் கேட்ட போது ஒரு நடிகர் வளர்ந்து வரும் போது அவர் சம்பளத்தை உயர்த்துவது சினிமாவில் சகயம் தானே. அதில் ஒன்றும் தவறில்லையே என்று கூறினார்.

அடுத்து வருத்த படாத வாலிபர் சங்கம் 2 படத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது. இவ்வாறு இருக்க தற்போது சில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவின் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சூர்யா, ஜோதிகா நடிப்பில் 2006 ஆம் ஆண்டு சில்லுனு ஒரு காதல் வெளியானது. அந்த படம் அனைவரது பேவரீட் படமாக மாறிவிட்டது. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் கவின் நடிக்கவுள்ளாராம். இருப்பினும் இந்த படத்தில் சூர்யா அளவிற்கு நடிப்பாரா? என்பது அனைவரது கேள்வியாகவும் இருக்கின்றது.

more news