சிம்புவின் எஸ்டிஆர் 48 இல் யுவன் இசை!

நடிகர் சிம்பு தற்போது தக் லைப் படத்தில் நடித்து வருகின்றார். அதுவும் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பத்து தல படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இப் படத்திற்கு பின் தற்போது தக் லைப் படத்தில் நடித்து வருகின்றார். தக் லைப் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வருகின்றது.

இப் படத்தின் படபிடிப்பு சமயத்தில் சிம்பு ஒரே டேக்கில் நடித்து முடித்ததை பார்த்து மணிரத்தினம் இப்படி ஒரு நடிகரா? என ஆச்சரியப்பட்டுள்ளார். அவரை கூப்பிட்டு பாராட்டியும் உள்ளார்.

இதில் முதலில் துல்கர் சல்மான் தான் நடிக்கவிருந்தார். இவர் விலகிய பின்னரே இதில் சிம்பு நடிக்க வாய்பு கிடைத்தது. இப் படத்தின் படபிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெறுவதால் சிம்புவால் அடுத்த படத்தில் கமிட் ஆக முடியவில்லை.

இதில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கின்றார். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதற்கு திரிஷா 12 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்.

இவ்வாறு இருக்க சிம்புவின் எஸ்டிஆர் 48 தொடர்பாக அப்டேட் வெளியாகியுள்ளது. அதில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் சிம்பு ஹீரோ வில்லன் என இரட்டை வேடங்களில் நடுக்கவுள்ளார். ஜான்வி கபூர் மற்றும் கியாரா அத்வானி ஆகிய நடிகைகளும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

more news