இலங்கையில் நடைபெறும் விஜய்யின் கோட் பட படபிடிப்பு!

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் கோட். இந்த படத்தின் படபிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டன.

கோட் படத்தில் இருந்து விசில் போடு பாடல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப் பாடல் மதுபழக்கத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்திருந்தது. அரசியலுக்கு நுழையும் இந்த சமயத்தில் இப்படி ஒரு பாடல் தேவையா? என்று அனைவரும் கேட்டு வருகின்றனர்.

விஜய் நடிப்பில் உருவாக்கி வரும் இந்த கோட் படம் வரும் செப்டெம்பர் 5 ம் திகதி வெளியாகவுள்ளது. இப் படத்திற்காக 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.

கோட் படத்தில் விஜய் நடிக்கவில்லை என்றும் அதற்கு பதிலாக  டூப் போட்டு ஆர்டிஸ்ட்களை வைத்து எடுத்து இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகின்றது.

விசில் போடு பாடல் மட்டும் தான் இவர் நடனம் ஆடினாராம். மாஸ்க் போட்டு டான்ஸ் ஆடுகிற மாதிரி ஒரு பாடல் இருக்கிறது. அந்த பாடலில் விஜய் ஆடவில்லையாம். இது மட்டுமல்ல சண்டை காட்சிகள் கூட ஆர்டிஸ்ட்களை வைத்து தான் வெங்கட் பிரபு எடுத்துள்ளார்.

இவ்வாறு இருக்க விஜய் நடிப்பு காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டது. தற்போது ஏனைய காட்சிகள் எடுப்பதற்கு இலங்கைக்கு பட குழு வந்துள்ளதாம்.

இலங்கை ஹார்பரில் ஆக்ஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக போகம்பரா சிறைச்சாலையில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என கூறப்படுகின்றது.

more news