ரத்னம் படத்திற்கு வந்த சோதனை!-திருப்பூர் சக்தி தியேட்டரில் நிறுத்தப்பட்ட காட்சி

விஷால் நடிப்பில் உருவான ரத்னம் படம் இன்று வெளியானது. இப் படம் ஹரியின் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

ஹரியின் இயக்கத்தில் விஷாலின் நடிப்பில் உருவாகிய தாமிர பரணி,பூஜை ஆகிய இரு படங்களும் மிகபெரும் வரவேற்பை பெற்றது.

இதன் பின் விஷாலினால் படங்களின் வரவேற்பை உயர்த்த முடியவில்லை.

விஷால் நடிக்கும் அனைத்து படங்களும் தோல்வி படங்களாகவே அமைந்தது.

சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் விஷாலுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. இப் படம் ரசிகர்கள் எதிபார்த்ததை விட அதிகளவு திருப்தி படுத்திவிட்டதாக ரசிகற்க கூறினர்.

நீண்ட இடைவேளைக்கு பின் விஷாலுக்கு வெற்றியை கொடுத்துள்ளது.

இந்த படத்தின் வெளியீட்டு நாளை பின் தள்ளி வைக்குமாறு உதயநிதி கூறியதாகவும் அதற்கு மறுத்துவிட்டேன் என்றும் சமீபத்தில் கூறினர். அவர் சொன்னது போல் செய்திருந்தால் அது வெற்றியை தழுவியிருக்காது என்றும் கூறினர்.

இவ்வாறு இருக்க இன்று ரத்னம் படம் வெளியானது. இப் படத்தை வெளியிடுவதற்கு திரை அரங்குகள் கிடைத்தது திணறி கொண்டிருந்தார். பின் ஒருவாறு வெளியீட்டு விட்டார்.

இப் படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை பற்றி நல்லவாறே விமர்சிக்கின்றனர்.

இந் நிலையில் திருப்பூர் சக்தி சினிமாஸ் தியேட்டரில் ரத்னம் படம் ரிலீஸானது. ஆனால் திடீரென இப்போது அந்தத் தியேட்டரில் ரத்னம் பட காட்சி நிறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கான காரணங்கள் எதுவும் நிர்வாகம் தெரிவிக்கவில்லை. ரத்னம் படத்திற்கு தியேட்டர் கிடைக்காமல் தவித்த விஷாலுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதில் சதி வேலைப்பாடுகள் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது.

More News