விஷால் ஐ கூல் சுரேஷ் உடன் ஒப்பிட்டு பேசிய ரசிகர்!-ரத்னம் விமர்சனம்

ஹரி இயக்கத்தில் விஷாலின் நடிப்பில் உருவான ரத்னம் படம் இன்று வெளியானது.

இப் படம் வெளியாகுவதற்கு பல தடைகள் இருந்தன. அந்த தடைகளை மீறி படம் வெளியான போதும் திருப்பூரில் உள்ள தியேட்டர் ஒன்றில் பட காட்சிகள் நிறுத்தப்பட்டதாக பல சர்ச்சைகள் எழுந்தன.

ரத்னம் படத்தில் விஷாலுடன் பிரியா பவானி சங்கர், யோகி பாபு, சமுத்திரகனி, கௌதம் மேனன் போன்றோர் நடித்திருந்தனர்.

இப் படத்தில் சண்டை காட்சிகள் தான் அதிகமாக இருக்கிறது.

இன்று படம் பார்த்தவர்களிடம் விமர்சனம் கேட்ட போது படம் நல்லாவே இல்லை, பின்னணி இசை நல்லாவே இல்ல, விஷாலின் நடிப்பு எப்படி இருக்கிறது என்று கேட்ட போது நன்றாகவே இல்ல என்றும் கூறினர்.

ஹரியின் படம் என்றால் எப்பவும் விறுவிறுப்பாக தான் இரு க்கும் . ஆனால் இந்த படம் ஹரியின் படம் போலவே இல்லை என்றும் கூறினர்.

யோகி பாபுவின் காமெடி நன்றாக இருப்பதாக கூறினர்.

கதாநாயகியின் நடிப்பு நன்றாக இருக்கிறது. சாமி 2 ஐ மீறிவிட்டது என்று கலாய்த்து வருகின்றனர்.

படத்தின் பாடல் ஒன்றும் நன்றாக இல்லை .

ரத்னம் படத்தோட கதையா பாக்கிறவங்களுக்கும் கேக்குறவங்களுக்கும் கண்லயும் காதிலயும் ரத்தம் என்று தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஷாலின் நடிப்பு எல்லாம் போய்விட்டது. அவர் இனிமேல் கூல் சுரேஷ் மாதிரி கதைப்பதற்கு தான் சரி என்றும் கூறி வருகின்றனர்.

More News