கருடனி ன் வெற்றிக்கு சூரிக்கு கிடைத்த பரிசு!

தமிழ் சினிமாவில் காமெடியானாக அறிமுகமாகி இன்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகர் சூரி.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பரோட்டா சூரியாக மக்கள் மனதில் இடம் பிடித்த இவர் இந்து ஹீரோவாக உயர்ந்து நிக்கின்றார். வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கிரோவாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் கருடன் படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக மாறியது. இது தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இவர் கிரோவாக நடிப்பதற்கு தளம் அமைத்து கொடுத்தவர் வெற்றிமாறன் என்று கூறலாம். விடுதலை 2 படமும் வெளியாகவுள்ளது.

துரை செந்தில் இயக்கத்தில் வெளியான கருடன் படத்திற்கு கதை எழுதியவர் வெற்றி மாறன். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப் படத்தை தயாரித்துள்ளது. இந் நிலையில் லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் சூரிக்கு ஒரு காஸ்ட்லி கார் பரிசாக கொடுக்கப்பட்டது. சூரியிடம் இல்லாத பிஎம்டாபிள்யு கார் பரிசாக வழங்கபட்டுள்ளது.

இவ்வாறு இருக்க இந்த படம் ரிலீஸ் ஆகுவாதற்கு தடை ஏற்பட்டதாம். இப்படம் தயாரிக்கும் போது 7 கோடி கடன் ஏற்பட்டதாம்.

அந்த கடனை திருப்பி கொடுத்தால் மட்டுமே படம் ரிலீஸ் ஆகும் என்று கூற , உடனே சூரி தான் முன்வந்து நான் அதற்கு முழு பொறுப்பையும் ஏற்கின்றேன் என கையெழுத்து இட்ட பின்பு தான் படம் ரிலீஸ் ஆனது. இதனால் படத்தில் வசூலில் அதிகம் கடனுக்கே செலவாக்கி விட்டதாம். அதிலும் முழு கடனு வட்டியுடன் திருப்பி செலுத்தபட்டதாக கூறப்படுகின்றது.

more news

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*