வெறுப்பு என்பது மனிதரிடத்தில் தோன்றும் ஆழமான விருப்பமின்மை காரணமாக தோன்றும் ஓர் உணர்ச்சி ஆகும். அந்த வகையில் வெறுப்பானது மனிதர்களின் மீது மட்டுமன்றி பொருட்களிலும் அல்லது எண்ணங்களிலும் ஏற்படுகின்றது.
மேலும் வெறுப்பானது ஒருவரிடத்தில் அதிகமாக ஏற்படுகின்ற போது பல குற்றங்களிற்கும் வழிவகுக்கக் கூடியதாக திகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இவ்வாறாக வெறுப்புடன் காணப்படும் நபரிடம் கோபமும், அமைதியின்மையும் இருக்கும். அதே போன்று வெறுப்பிற்கான ஆழமான காரணமும் அவரிடம் காணப்படும்.
மனிதர்களாகிய நாம் வெறுப்பினை தகர்த்தெறிந்து அன்பினை வெளிப்படுத்துபவர்களாக திகழும் போதே நாம் இவ் பூவுலகில் சந்தோசமாக வாழ முடியும்.
வெறுப்பு வேறு சொல்
- பகைமை
- விருப்பமின்மை
- செறிவு
- சினம்
- அருவருப்பு
- துன்பம்
வெறுப்பு பேச்சு
வெறுப்பு பேச்சு எனப்படுவது யாதெனில் இனம், சாதி, மதம், பால், வயது, நாட்டுரிமை, உடல் குறைகள் என பல விடயங்களை கொண்டு ஒருவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுவதாகும்.
அந்த வகையில் ஒருவரின் மீது மற்றவர்களுக்கும் வெறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக அவர் மனம் புண்படும் படி பேசுவதே வெறுப்பு பேச்சாகும் எனலாம்.
You May Also Like: