உலகநாயகன் கமல் நடிப்பில் உருவாக்கவுள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படத்தை மணிரத்தனம் இயக்கவுள்ளார். மணிரத்னம் இயக்கும் திரைபடம் எதுவுமே தோல்வியை சந்தித்தது இல்லை.
இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கவுள்ள நிலையில் ஜெயம்ரவி, துல்கர் சல்மான் ஆகிய இருவரும் நடிப்பதற்கு ஒப்பந்தம் போட்டு பின்னர் விலகியதாகவும் தகவல் கசிந்தது.
ஜெயம்ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். மற்றும் துல்கர் சல்மான் மலையாளத்தில் ஒரு கலக்கு கலக்கி வருபவர். சமீப காலமாக இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.
இவர்கள் இருவரும் காதாநாயாகர்களாக இருந்தும் இப்படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியது.
காதாநாயாகர்களாக வலம் வந்தவர்கள் எல்லாம் இப்படத்தில் நடிப்பதால் இப்படம் மிக பெரும் வெற்றியை கொடுக்கும் என நம்படுகிறது.
இவ்வாறு இருக்க தேர்தல் காலம் என்பதால் கமல் தற்காலிகமாக இப்படத்தில் இருந்து விளக்குவதாகவும் தேர்தல் முடிந்ததும் தான் மீண்டும் இணைவதாகவும் கூறியுள்ளார்.
படம் எடுப்பதற்கு முன்பே இவ்வளவு பிரச்சினைகளை சந்தித்த படக்குழு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை சந்தித்துள்ளது.
இந்நிலையில் ஜெயம்ரவி, துல்கர் சல்மான் ஆகிய இருவருக்கும் பதிலாக சிம்பு மற்றும் அரவிந்தசாமி இருவரும் நடிக்க போவதாக அறிவிக்கபட்டது. தற்பொழுது ஜெயம்ரவி, துல்கர் சல்மான் இருவரும் தாம் இப் படத்தில் நடிக்கின்றோம் என முன் வந்துள்ளனர்.
இவர்கள் மீண்டும் நடிபிப்பதற்கு ஒப்பு கொண்டமையால் சிம்பு வேறு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்துகள் வெளியாகின.
பல கதாநாயகர்களை கொண்டு உருவாக்கபட்ட பொன்னியின் செல்வன் 1,2 மாபெரும் வெற்றியை ஈட்டியது. இப்படத்தை இயக்கியதும் மணிரத்னம் தான். இப்படத்திற்கும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றது.