ஆரம்பத்தில் ராகவா லாரன்ஸ் நடன இயக்குநராகவே தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். ஜெண்டில்மேன் படத்தின் மூலம் பின்னணி நடனக் கலைஞராக அறிமுகமாகி பின் சின்ன மேடம் படத்தில் நடனமாடினார்.
அவர் திரை உலகிற்கு அறிமுகமான முதல் திரைபடம் ஜென்டில்மேன் ஆகும். அதனை தொடர்ந்து அமர்க்களம், ஸ்பீடு டான்சர் போன்ற படங்களில் நடித்து தனக்கான ஒரு இடத்தை பெற்றுக்கொண்டர்.
அதனை தொடர்ந்து நடித்த ஒரு சில படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் இறுதியாக நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் அவருக்கு பெரும் வெற்றியை கொடுத்தது. இப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
ராகவா லாரன்ஸ் நடிகராக மட்டுமல்லாது இயக்குனராக,நடன இயக்குனராக, தயரிப்பாளராக பணியாற்றி வருகின்றார்.
ராகவா லாரன்ஸ் தன்னுடைய நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு மிகப்பெரிய உதவிகளை செய்து வருகிறார். ஏழை குழந்தைகள் மற்றும் அங்கவீமான குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றார். இது மட்டுமல்லாது பல ஏழை மக்களுக்கும் உதவி செய்து வருகின்றார்.
சமீபகாலத்தில் பாலா செய்து வரும் உதவிகளை பார்த்து நீ எத்தனை குழந்தைகளை கல்வி கற்பிக்க விரும்புகின்றாயோ அத்தனை குழந்தைகளையும் தான் படிபிக்கின்றேன் என்று கூறியுள்ளார். அவருடைய அப்பெரிய மனது யாருக்குமே வராது என்றுதான் கூறவேண்டும்.
இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரிய மல்லர் கம்பம் சாகச நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது மட்டுமல்லாது அவரது கை கொடுக்கும் கை மாற்று திறனாளிகள் குழுவில் இருந்தும் பல போட்டியாளர்களை இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு பேசிய அவர் இவ் மாற்று திறனாளிகளை வைத்து தனக்கு கிடைக்கும் அனைத்து படங்களிலும் நடன மாடவைப்பேன் என்றும் மாற்று திறனாளிகளை வைத்து படமொன்றை எடுக்கபோவதாகவும் அதில் இவர்களை நடிக்க வைப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அரசியல் பற்றி கேள்வி எழுப்பிய போது அவர் விஜய் மற்றும் விஷால் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து அவர்கள் வெற்றி பெறுவதற்கு இறைவனை பிரார்ததனை செய்வதாகவும் கூறியுள்ளார்.
தனக்கும் அரசியலுக்கு வர ஆசை என்னுடைய அம்மாவிடம் இதை பற்றி கேட்டேன் அவர் மறத்து விட்டார். நான் அம்மாவின் பேச்சை என்றும் தட்டியது இல்லை அதனால் அதை அவ்வாறே விட்டு விட்டேன் என்றும் கூறினார்.