தன்னுடைய படத்தையே காப்பி பண்ணும் தனுஷ்!

நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமல்லாது பாடகராகவும் இயக்குனராகவும் தனது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றார். பவர் பாண்டி படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமானார்.

நீண்ட இடைவேளைக்கு பின் தற்பொழுது ராயன் படத்தை இயக்கவுள்ளார். அதில் தானே கீரோவாகவும் நடித்து வருகிறார். மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கவுள்ளார்.

ராயன் படத்தில் தனுஷ் உடன் சந்தீப், காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு இசையமைப்பாளர் தேவாவை கேட்க அவர் மறுத்து விட்டார். தற்பொழுது அவருடைய காதபாத்திரத்தில் நடிப்பின் அரக்கன் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளாராம்.

ஏ.ஆர்.ரகுமான் பொதுவாக படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கும் போகமாட்டார். அவர் இசையமைப்பதோடு நிறுத்தி விடுவார். ஆனால் தனுஷ் இப்படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று படபிடிப்புகளை பார்த்து தனுஷ்ற்கு பரட்டுக்களை தெரிவித்துள்ளார். இங்கு பல மணி நேரங்களையும் செலவழித்து வந்துள்ளார்.

தனுஷ் ரசிகர்கள் அனைவரும் தனுஷ் அவர்களை அடுத்த வெற்றி மாறன் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் கதை வட சென்னையின் கதையை போலவே சென்னையை மையமாக கொண்ட படமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

தனுஷ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வந்தாலும் அவர் நிஜ வாழ்க்கை சரிந்திருப்பது அவரின் ரசிகர்களுக்கு மிக பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தனுஷ், ஐஸ்வர்யாவின் விவாகரத்து ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இவ் விடயம் சம்பந்தமாக ரஜனி தனுஷ் இடம் பேசுவதற்காக அழைத்த போது ஐஸ்வர்யா விவாகரத்து வாங்குவதில் உறுதியாக இருக்கிறாராம்.

ஆனால் இதில் இருவீட்டாருக்கும் துளியும் சம்மதம் இல்லை. ரசிகர்களை போலவே குடும்பத்தாரும் இருவரும் பிரியக்கூடாது என்று கடவுளை வேண்டுகிறார்களாம்.

More News