விஜய்க்கு ஜோடியாகும் அபர்ணா!- தளபதி 69 அப்டேட்

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய். இவர் தற்போது கோட் படத்தில் நடித்து வருகின்றார். இப் படம் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. செப்டெம்பர் மாதம் இப் படம் வெளியாகவுள்ளது.

கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக  திவ்யபாரதி நடித்துள்ளார். இப் படத்தில் பிரபு தேவா, பிரசாந்த் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இவர் இறுதியாக நடிக்கவுள்ள படம் தளபதி 69. இதோடு இவர் சினிமாவில் இருந்து விளக்கு அரசியலுக்குள் செல்லவுள்ளார். இவரின் தமிழக வெற்றி கழகம் சென்ற தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் 2026 ஆம் ஆண்டு வரும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

இவ்வாறு இருக்க இப் படத்தை இயக்க போவது எச் வினோத் என்று கூறப்படுகின்றது. மேலும் தயாரிப்பு நிறுவனமும் விஜய்யின் சம்பளத்தகை கேட்டு விலகி விட்டது.

இப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து நடிகை பூஜா ஹெக்டே விஜய்யுடன் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது . இந்நிலையில் தற்போது சூர்யாவுடன் சூரரைப் போற்று படத்தில் நடித்திருந்த நடிகை அபர்ணா பாலமுரளி விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் சரியான முடிவுகள் தெரியவில்லை.

more news