இரண்டு நாட்களில் மட்டும் 15 கோடியா?- ஆட்டத்தை ஆரம்பித்த மகாராஜா!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் நேற்று முன் தினம் வெளியானது. தமிழ் சினிமாவில் எல்லாதரப்பு ரசிகர்களையும் கொண்ட நடிகர்களின் பெயர் பட்டியல் எடுத்தால் அதில் விஜய் சேதுபதியின் பெயர் நிச்சயமாக இருக்கம்.

இவர் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். ஆரம்பத்தில் கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று இந் நிலைக்கு வந்துள்ளார்.

மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நட்டி நட்ராஜ், மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

திரைக்கதை

சென்னை கே.கே.நகர் பகுதியில் சலூன் கடை வைத்திருக்கும் மகாராஜா (விஜய் சேதுபதி) தனது மகள் ஜோதியுடன் (சச்சினா நெமிதாஸ்) பள்ளிக்கரணை பகுதியில் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் காவல் நிலையம் செல்பவர் தன் வீட்டிலிருந்த ‘லட்சுமி’ திருடு போய்விட்டதாகவும், ஸ்போர்ட்ஸ் கேம்ப்பிற்குச் சென்றிருக்கும் தன்னுடைய மகள் ஜோதி திரும்ப வருவதற்குள் காவல்துறை லட்சுமியைக் கண்டறிந்து தரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறார். மகாராஜாவுக்குக் காவல் அதிகாரிகள் உதவினார்களா, உண்மையில் மகாராஜாவின் வீட்டில் நடந்தது என்ன, அவருக்கும் வீடு புகுந்து கொள்ளை அடிக்கும் ஒரு கும்பலுக்கும் என்ன தொடர்பு என்பதே இந்தப் படத்தின் கதை.

சலூன் கடை ஒன்றில் வேலை பார்க்கும் மகாராஜாவின் (விஜய் சேதுபதி) மனைவி விபத்தில் இறந்துவிடுகிறார். மகள் ஜோதி (சச்சனா) ஸ்போர்ட்ஸ் கேம்புக்காக வெளியூர் சென்றுவிட, தனிமையில் இருக்கிறார் மகாராஜா. வேலை முடித்து வீட்டுக்கு வந்த தன்னை தாக்கிவிட்டு, வீட்டிலிருந்து லக்‌ஷ்மியை சிலர் திருடிச் சென்றுவிட்டதாகவும், அதனை மீட்டு கொடுக்குமாறும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்.

தொடக்கத்தில் இந்தப் புகாரை உதாசினப்படுத்தும் காவல் துறை, ரூ.7 லட்சம் வரை காசு கொடுப்பதாக மகாராஜா சொன்னதும், லக்‌ஷ்மியை தேடிக் கண்டுபிடிக்கும் விசாரணையை தீவிரப்படுத்துகின்றனர்.

‘குரங்கு பொம்மை’ படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கியிருக்கும் இப்படம் ஒரு முடிச்சை தனக்கத்தே வைத்துக்கொண்டு நகர்ந்து கொண்டேயிருக்கிறது. இடைவேளைக்கு முன்பு வரை அந்த முடிச்சு என்ன என்ற கேள்வியும், ஆர்வத்தையும் பார்வையாளர்களிடையே தக்க வைத்து நகரும் திரைக்கதை எங்கேஜிங்காகவே கடக்கிறது.

இப் படத்திற்கு நல்ல விமர்சனகளே கிடைத்துள்ளது. பெரிய பாரிய திரையரங்குகள் எல்லாமே ஹவுஸ் ஃபுல் . இப் படத்திற்கு பற்று சீட்டு கிடைப்பதே கடினமாக இருக்கின்றது.

இவ்வாறு இருக்க இரண்டு நாட்களில் மட்டும் 15 கோடி வசூல் செய்துள்ளது.

more news