இறுகப்பற்று திரைப்படம் எப்படி உள்ளது – இறுகப்பற்று விமர்சனம்

irugapatru thirai vimarsanam in tamil

  • தயாரிப்பு: எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, பி.கோபிநாத், தங்க பிரபாகரன்.ஆர்
  • இயக்கம்: யுவராஜ் தயாளன்
  • இசை: ஜஸ்டின் பிரபாகரன்
  • நடிப்பு: விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சனியா ஐயப்பன்
  • வெளியான திகதி: 6 அக்டோபர் 2023
  • திரைப்பட நேர அளவு: 2 மணி நேரம் 33 நிமிடங்கள்

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சனியா ஐயப்பன் மற்றும் பலர் நடிப்பில் அக்டோபர் 6, 2023 அன்று வெளிவந்த படம் இறுக்கப்பற்று.

திருமணம் செய்தாலே பிரச்சனை தான் என்று நாம் பல வீடுகளில் கேட்டு இருப்போம். திருமண உறவில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் அதெற்கெல்லாம் விவாகரத்து, பிரிவு என்று சென்றால் எங்கே போய் முடியும். இவ்வாறான உளவியல் பிரச்சனைக்கு அழகாக தீர்வு சொல்லும் படமே இந்த இறுகப்பற்று திரைப்படம்.

திரை விமர்சனம்

தம்பதிகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உளவியல் ரீதியாக தீர்வு சொல்பவராக இருக்கும் ஷ்ரத்தாவிடம் விதார்த்-அபர்நதி மற்றும் ஸ்ரீ-சானியா ஜோடிகள் கவுன்சிலிங் வருகிறார்கள்.

அதில் விதார்த் தனது மனைவி குண்டாக இருப்பதாகவும் வாய் துர்நாற்றம் இருப்பதாகவும் போன்ற பிரச்சனைகளை கூறி விவாகரத்து கேட்கின்றார்.

அதேபோன்று ஸ்ரீ தனது மனைவி தன்னிடம் காதலோடு இருப்பதில்லை என தனது பிரச்சனையை கூறுகின்றார். இதற்கெல்லாம் ஆலோசனைகளை வழங்கும் ஷ்ரத்தா தனது கணவர் விக்ரம்பிரவுவுடன் சண்டையே போடாமல் வாழ்ந்து வருகின்றார். இதுவே அவர்களுக்கிடையில் ஒரு பிரச்சனையாக மாறுகின்றது.

இவ்வாறு மூன்று தம்பதிகளும் சந்திக்கும் பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பதை எதார்த்தமாக காட்டியிருக்கின்றார் இயக்குனர். படத்தை பார்க்கும் போது எமது வாழ்விலும் இவ்வாறான சம்பவங்கள் இருக்கின்றதே என்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்கவே முடியாது. அந்த அளவிற்கு ஒவ்வொரு காட்சிகளும் இன்றைய வாழ்வோடு ஒத்து போவதாக அமைந்துள்ளது. இதுவே படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.

மூன்று பிரதான கதாநாயகர்களும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். அவர்களுக்கு இணையாக கதாநாயகிகளும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.

பின்னணி இசை சிறப்பாக இருந்தாலும் பாடல்கள் சுமாராகவே உள்ளது.

கதையில் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் இயக்குனர் தான் சொல்ல வந்த கதையை அழகாக திரையில் காட்டியுள்ளார். அந்த வகையில் இறுக்கப்பற்று மனதை இறுகப்பற்றிவிட்டது.

You May Also Like:

தாழ்வு மனப்பான்மை நீங்க என்ன செய்ய வேண்டும்