சூர்யா மறுத்த சுதா கொங்கராவுடன் இணையும் சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன்.

சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகின்றார். இப் படம் மிகவும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இப் படத்தின் சண்டை காட்சி மிகவும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக 10000 பேரை வைத்து சண்டை காட்சி எடுப்பதாக கூறப்படுகின்றது.

இப் படத்தை பார்த்த அஜித் கூட சிறுத்தை சிவாவிடம் பேசியுள்ளாராம். இப் படத்தின் ஒரு சில காட்சிகளை பார்த்த அஜித் இப் படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவை பாராட்டியது மட்டுமல்லாது விரைவில் சந்திப்போம் என்றும் கூறியுள்ளார்.

சுதா கொங்கரா இயக்கவுள்ள புறநானூறு படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக இருந்தது. ஆனால் தற்போது இவர் மறுத்து விட்டாராம். அனைவரும் சூர்யா நல்ல படத்தை மிஸ் பண்ணி விட்டார் என்று கூறி வருகின்றனனர்.

நிலைமை இவ்வாறு இருக்க சுதா கொங்கரா தற்போது சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ளார். ஆனால் இப் படத்தின் உத்தியேகபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. சிவகார்த்திகேயன் புறநானூறு படத்தில் நடிக்கவுள்ளாரா? என்பதும் தெரியவில்லை. இவர்கள் இருவரும் இணைவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

more news