சிவகார்த்திகேயனே இல்லாமல் உருவாகும் வருத்தபடாத வாலிபர் சங்கம்!

தமிழ் சினிமாவிற்கு விஜய் டிவியில் இருந்து வந்தவர்கள் அதிகம். அதில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராகிவிட்டார்.

சிவகார்த்திகேயன் தனுஷ் நடித்த மூணு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல காமெடியனாக அறிமுகமானார். இதன் பின்னர் இவருக்கு கீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

2013 ஆம் ஆண்டு வெளியான படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப் படத்தில் போஸ் பாண்டியாக நடித்திருப்பார். இவருடன் சூரி நடித்திருப்பார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருப்பார். இப் படத்தை பொன்ராம் இயக்கியிருப்பார். இப் படத்திற்கு டி இமான் இசையமைத்தும் இருப்பார்.

இவர்கள் இருவருடைய காமெடி ரொம்ப நன்றாகவே இருக்கும். இப் படம் ஹிட் படமாக மாறியது. ஸ்ரீதிவ்யாவின் தந்தையாக சத்தியராஜ் நடித்திருப்பார். இந்த படத்தின் ஹிட்ற்கு இவரின் நடிப்பும் ஒரு காரணம் என்று கூறலாம். ஒரு பயங்கர வில்லன் கதாபாத்திரமாக காட்டி இறுதியில் ஒரு காமெடியானாக காட்டியது இப் படத்தின் ஒரு பிளஸ் போயிண்ட் ஆகும்.

இதனை தொடர்ந்து மான் கராத்தே உட்பட அயலான் வரைக்கும் நடித்து விட்டார். தற்போது நடித்த அயலான் படமும் வெற்றி படமாக மாறியது.

இவ்வாறு இருக்க இயக்குநர் பொன்ராம் இப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளாராம். ஆனால் இதில் கிரோவாக சிவகார்த்திகேயன் நடிக்கவில்லையாம்.

சிவகார்த்திகேயனுக்கு பதிலாக கவின் நடிக்கவுள்ளாராம். இப் படத்தில் சூரியும் நடிக்க போவத்தில்லை. எப்படி இப் படத்தை இயக்கவுள்ளார் என்றுதான் தெரியவில்லை. ஆனால் இப் படம் கவினின் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக இருக்கும்.

more news