மீண்டும் களத்தில் இறங்கிய வெள்ளி விழா நாயகன் மோகன்!

நடிகர் மோகன் கர்நாடக்க மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்தாலும் இவரை உச்சத்தில் ஏற்றியது தமிழ் சினிமாதான்.

கன்னட திரையுலகில் தான் முதலில் அறிமுகமானார். பாலுமகேந்திராவின் கோகிலா திரைபடத்தின் மூலம் அறிமுகமானார். இப் படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருப்பார்.

இதனால் இவரை கோகிலா மோகன் என்று அனைவரும் அழைக்க ஆரம்பித்தனர். 1980 இல் தமிழில் மூடு பனி படத்தின் மூலம் அறிமுகமனர். இதன் பின் 80 களில் வெள்ளிவிழா நாயகன் என்று அழைக்கபட்டார்.

பின் நெஞ்சத்தை கிள்ளாதே எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக திகழ்ந்தார். மற்றும் பயணங்கள் முடிவதில்லை என்ற படத்திற்கும் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் வாங்கியுள்ளார்.

2015 இற்கு பின் சினிமாவில் காணாமல் போய்விட்டார். நடித்தால் நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்த வாய்ப்புகள் அனைத்தையும் தொலைத்து விட்டார்.

தற்போது விஜய்யின் கோட் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது கீரோவாகவும் நடித்துள்ளார். இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் மோகன் ஹீரோவாக நடிக்கும் படம் ஹரா.

இப் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகிய நிலையில் நேற்றைய தினம் டிரெயிலர் வெளியாகியுள்ளது.

more news