சூப்பர் சிங்கர்!-இறுதி சுற்றிக்கு தெரிவான நபர்கள் இதோ!

விஜய் டிவியில் கடந்த 10 வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், சரண் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

இதன் ‘கிராண்ட் ஃபினாலே’ இன்று  நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. டி.வி.யிலும் லைவாக ஒளிபரப்பாகிறது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 

விஜய் டிவிக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. அதிலும் அதிகமான ரசிகர் கூட்டத்தை கொண்ட நிகழ்ச்சியாக பிக் போஸ் மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்க்கப்படுகின்றது.

இது ஒரு போட்டி நிகழ்ச்சியாக இருப்பினும் இதை ஒரு நகைசுவையாக கொண்டு செல்வதால் இதற்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இந் நிகழ்ச்சியின் பிளஸ் என்னவென்றால் அது இதில் ஆங்காரிங் செய்யும் மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா என்றே சொல்லலாம்.

தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 10 நிறைவடையாவுள்ள நிலையில் இன்று இறுதி போட்டி நடைபெற உள்ளது. இதில் இறுதி 5 போட்டியாளர்கள் தேர்வாகி உள்ளனர்.

விக்னேஷ், ஜீவிதா, ஜான், வைஷ்ணவி, ஸ்ரீநிதி எனும் 5 போட்டியாளர்கள் இறுதியாக மோதவுள்ளனர். இதில் யார் வெற்றி பெற பவினறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.