வசூலில் பிச்சு உதரும் அரண்மனை 4!-எப்படியும் 50 கோடிய தாண்டிடும்..

அரண்மனை 4 கடந்த வெள்ளிகிழமை வெளியானது. வெளியான முதல் நாளே 4 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியிருந்தது.

இப் படத்தின் விமரசங்கள் கலவையான விமர்சனகளை பெற்றாலும் இது ஒரு குடுமம் படமாக அமைந்திருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

அரண்மனை 3 தோல்வியை கொடுத்த நிலையில் இதோடு நிறுத்தி விடுங்கள் என சுந்தர் சியை எல்லோரும் கலாய்த்து வந்தனர்.

அரண்மனை 3 இல் செய்த தவறுகளை இதில் திருத்தியிருப்பதாக பலரும் விமர்சித்துள்ளனர்.

வழக்கறிஞர் சரவணன் (சுந்தர்.சி) தன் அத்தையுடன் (கோவை சரளா) வசித்து வருகிறார். குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட தன் தங்கை செல்வி (தமன்னாவும்) தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வருகிறது.

இதனால், தன் அத்தையுடன் தமன்னாவின் ‘அரண்மனை’ வீட்டுக்குச் செல்கிறார் சுந்தர்.சி. தன் தங்கை மற்றும் அவர் கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கும் அவர், அந்த வீட்டில் இன்னொரு உயிர் போக இருப்பதை அறிகிறார்.

அந்த உயிரைக் கொல்லத் துடிக்கும் தீயசக்தி எது, அது ஏன் கொல்லத் துடிக்கிறது? அந்த உயிரைக் காப்பாற்ற சுந்தர்.சி என்ன செய்கிறார் என்பது தான் அரண்மனை 4 இன் கதை.

இது ஒரு குடும்ப படம் என்பதால் மூன்று நாட்களில் 17 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

முதல் நாள் 4.65 கோடியும் இரண்டாம் நாள் 6.25 கோடியுமாக 2 நாட்களில் 10 கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் எப்படியும் 50 இலிருந்து 75 கோடிவரை வசூல் செய்யும் என்று கூறபபடுகின்றது.

more news

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*