சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்த ரஜனி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகின்றார்.
71 வயது கடந்தும் அவரது ஸ்டைல் மாறாமல் இருப்பதுதான் அவர் முன்னணி நடிகராக திகழ்வதற்கு காரணம்.
தற்போது இவர் வேட்டையான் படத்தில் நடித்து வருகிறார்.
அதே நேரத்தில் லோகேஷ் இயக்கத்தில் வெளியாகவுள்ள கூலி படத்தில் நடிக்கவவுள்ளார். கூலி டீஸர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
கூலி டீஸர் வெளியானதும் பெரும் சர்ச்சை கிளம்பியது.
இளையராஜவின் டிஸ்கோ இசை இதில் பயன் படுத்தபட்டதாக கூறி அதை உடனடியாக நீக்கவேண்டும் என்று இளையராஜா சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இளையராஜா போன்ற பிரபலங்களின் வாழ்க்கைவரலாறு படமாக தயாராக உள்ளநிலையில் தற்போது ரஜனியின் வாழ்க்கை வரலாறு படமாக இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் இது குறித்த தகவல் நேற்று கசிந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தயாரிக்க இருப்பது சஜித் நாடியவாலா என்று கூறப்படுகிறது.
சல்மான்கான் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சிக்கந்தர்’ படத்தையும் இவர் தான் தயாரிக்க உள்ளார் என்பது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் இப் படத்தில் ரஜனியாக ஷாருக்கான் தான் நடிக்கவேண்டும் என்று ரசிகர்கள் கூறிக்கொண்டு வருகின்றனர். ரசிகர்களின் வேண்டுகோள் நிறைவேற்றப்படுமா? என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.