தளபதி விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்குள் பிரவேசித்துள்ளார். இவர் தளபதி 69 ஓடு சினிமாவில் இருந்து முழுமையாக விலகுவதாக கூறிவிட்டார். தனது இறுதி படம் என்பதால் அதற்கு சம்பளமாக 250 கோடி வங்கியுள்ளாராம்.
தமிழக வெற்றிகழகம் எனும் பெயரில் கட்சி ஆரம்பித்த இவர் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தளபதி அரசியலுக்கு செல்வது பற்றி சிலர் எதிர்மறையான விமர்சனங்களை கூறினாலும் பலர் இவரை வரவேற்கின்றனர்.
இவ்வாறு இருக்க அடுத்த தளபதி யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
வளர்ந்து வரும் நடிகரான கவின் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரையும் தான் எதிர்பார்க்கபடுகின்றது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் எல்லாம் பெரும் வரவேற்பை பெரும் நிலையில் தற்போது டாப் 10 நடிகர்களின் பெயரில் இவருடைய பெயரும் வந்து விட்டது.
இவருடைய வளர்ச்சி மிகவும் குறுகிய காலத்திற்குள் நடந்துள்ளது. இதையாருமே எதிபார்க்கவில்லை.
அனைத்து நடிக்கர்களும் பொறாமைபடுமளவிற்கு வளர்ந்து விட்டார்.
இவ்வாறு இருக்க நடிகர் கவின் தனது நடிப்பை சிறப்பான முறையில் வெளிக்காட்டி வருகின்றார்.
இவர் நடித்த டாடா படம் யாருமே எதிர்பார்க்காத அளவு கிட் அடித்தது.
தற்போது ஸ்டார் படத்தில் நடித்து வருகின்றார். இதன் டீரெயிலர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இவ்வாறு இருக்க கவின் தன்னுடைய ஸ்டார் பட புரோமோஷனுக்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது அவரிடமே இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது.
நீங்கள் தான் அடுத்த தளபதி என கூறுகின்றார்கள் எனக் கேட்டபோது, ஐயோ அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. 12 வருஷம் போராட்டம்.
இப்படி எதையாவது சொல்லி என்னை முடித்து விட்றாதீங்க என கலகலப்பாக கூறி இருந்தார்.