தனுஷின் குபேரா படத்தில் நாகர்ஜூனா! -மாஸ் காட்டும் குபேரா

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிக்கர்களில் ஒருவராக இருக்கின்றார்.

இவர் நடிகராக மட்டுமல்லாது பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் போன்ற அவதாரங்களையும் எடுத்துள்ளார்.

பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தற்போது ராயன் படத்தை தானே இயக்கி நடித்து வருகின்றார். அடுத்த வெற்றிமாறன் இவர் தான் எனும் அளவிற்கு வளந்து விட்டார்.

இவருடைய சினிமா வாழ்க்கை நன்றாக நகர்ந்தாலும் இவருடைய நிஜ வாழ்க்கையில் சிக்கி தவிக்கின்றார்.

இவர் ரஜனியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

இவ்வாறு இருக்க இவர்கள் விவாகரத்து விடையமே எங்கும் பேசப்படு வருகின்றது.

இந் நிலையில் தனுஷ் நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைபடம் குபேரா. இதில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.

இப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.

குபேரா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வருகின்றது.

இந்த படத்தில் நாகர்ஜுனா நடித்து வருகிறார் . அவர் இப் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் நாகார்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் ’குபேரா’ படத்தின் 50 வினாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் நடித்து இருக்கும் காட்சிகள் அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கட்டு கட்டாக பணம் இருக்கும் ஒரு இடத்தில் மழையில் குடை பிடித்துக் கொண்டு நிற்கும் நாகர்ஜுனா, அந்த பணம் அருகே தனது பாக்கெட்டில் இருந்து எடுத்து ஒரு 500 ரூபாய் நோட்டை வைக்கும் காட்சி இந்த வீடியோவில் உள்ளன.

இப் படத்தில் நாகர்ஜுனா துப்பறியும் விசாரணை அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

more news